சேதமடைந்து காணப்படும் பள்ளி வகுப்பறைகள் – சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள்..!!

சேலம் மாவட்டம், ஏற்காடு அருகே புதிய பள்ளிக் கட்டிடம் அமைத்துத் தர வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நடுர்கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் நிலையில், பள்ளி கட்டடம் சேதமடைந்து காணப்படுவதாகக் கூறப்படுகிறது. சேதமடைந்து காணப்படும் கட்டடத்தைச் சீரமைத்தும், போதிய வகுப்பறைகளை அமைத்துத் தர வலியுறுத்தியும் பலமுறை கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை எனத் தெரிவித்த அப்பகுதி மக்கள் பட்டிப்பாடி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தைக் கைவிடச் செய்தனர்.

Read Previous

அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 விரைவில் வழங்கப்படும் – முதலமைச்சர் ரங்கசாமி..!!

Read Next

இருமல், சளித்தொல்லை இருக்கா…? இதோ அதை சமாளிக்க சுவையா ஒரு சட்னி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular