வாழைத்தண்டு கூட்டு ஒரு முறை இப்படி செஞ்சு அசத்துங்க..!!

Oplus_131072

வாழைத்தண்டு கூட்டு செய்வது எப்படி?

தேவையானவை:

வாழைத்தண்டு ஒரு துண்டு
பாசிப்பருப்பு அரை கப்
சின்ன வெங்காயம் 8
பச்சை மிளகாய் 2
சீரகம் அரை டீஸ்பு+ன்
பச்சை வேர்க்கடலை கால் கப்
கறிவேப்பிலை 2 கொத்து
நெய், பால் சிறிதளவு
உப்பு தேவையான அளவு.

செய்முறை :

வாழைத்தண்டை நாரெடுத்து மிகவும் மெல்லிதாக நறுக்கிக் கொள்ளவும். பாசிப்பருப்பை மலர வேகவிடவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயைக் கீறிக்கொள்ளவும். பச்சை வேர்க்கடலையை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

மண் சட்டியில் அல்லது அடி கனமான வாணலியில் வேக வைத்த பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து நறுக்கிய வாழைத்தண்டு, வேக வைத்த பச்சை வேர்க்கடலை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வேகவிடவும். வெந்தவுடன் நெய்யில் வறுத்த சீரகம், கறிவேப்பிலை சேர்த்து, பால் கலந்து பரிமாறவும்.

சுவையான மற்றும் ஆரோக்கியமான வாழைத்தண்டு கூட்டு தயார்.

 

 

Read Previous

மனதை உடைத்த சிறுகதை..!! மற்றவங்களை பிரமிக்க வைப்பதாப்பா வாழ்க்கை..??

Read Next

கூட்டுக்குடும்பம்..!! தாத்தா பற்றிய அருமையான பதிவு கட்டாயம் படிங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular