ஓமவள்ளி இலையும் அதில் இருக்கும் எண்ணற்ற மருத்துவ குணங்களும்..!!

 

நமது முன்னோர்களின் காலகட்டத்தில் எல்லாம் எந்த விதமான சல்லி காய்ச்சல் மற்றும் கை கால்களில் ஏதாவது புண் அலர்ஜி போன்ற எது ஏற்பட்டாலும் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து இயற்கையான முறையில் தான் மருத்துவம் செய்வார்கள். ஆனால் இந்த காலகட்டத்தில் தான் எதற்கெடுத்தாலும் மருத்துவமனை செல்கிறோம். இந்நிலையில் ஓமவள்ளி இலைகளில் இருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த இலையிலிருந்து சாற்றை எடுத்து அதனுடன் சிறிது சர்க்கரை சேர்த்து நெற்றியில் பற்று போட்டால் ஜலதோஷம் தலைவலி மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் நீங்கும் அதுபோல் நீங்கள் அதிகப்படியான கபம் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால் இந்த இலையை அரைத்து தண்ணீரில் கலந்து கொதிக்க வைக்க வேண்டும் இவற்றுடன் ஏலக்காய் கிராம்பு ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றை நன்கு கலந்து தினமும் இரண்டு வேளை குடிக்க வேண்டும் இதனை நீங்கள் மூன்று நாள் மட்டும் குடித்து வந்தால் விரைவில் நல்ல முடிவை காண்பீர்கள். அதுமட்டுமின்றி இந்த இலையை தண்ணீரில் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து ஆவி பிடித்தாலும் நல்ல தீர்வு கிடைக்கும்.

Read Previous

வெட்டிவேருக்குள் இவ்வளவு மருத்துவ குணங்கள் ஒளிந்துள்ளதா..??

Read Next

பெண்கள் காலில் மெட்டி அணிவதற்கு பின்னால் உள்ள மருத்துவ நன்மைகள் இதுதான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular