கவினின் உடலை பெற்றுக் கொள்ள உறவினர்கள் தொடர்ந்து மறுப்பு..!!

நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவினின் உடலை பெற்றுக் கொள்ள உறவினர்கள் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

நெல்லை கேடிசி நகரில் ஐடி நிறுவன ஊழியரான கவின் என்ற இளைஞர் கடந்த 27 ஆம் தேதி ஆணவப் படு​கொலை செய்​யப்​பட்​டார். இந்த சம்​பவத்​தில், அவர் காதலித்​த​தாக கூறப்​படும் பெண்​ணின் சகோதரர் சுர்ஜித் என்​பவரை போலீ​சார் கைது செய்​தனர்.

தொடர்ந்து அவரது பெற்றோரான காவல் உதவி ஆய்​வாளர்​கள் சரவணன், கிருஷ்ணகு​மாரி ஆகியோர் மீதும் வழக்குபதிவு செய்​யப்​பட்​டு, இருவரும் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டனர். இரு​வரை​யும் கைது செய்​தால் மட்டுமே கவின் உடலை வாங்குவோம் என உறவினர்​கள் தொடர் போராட்​டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் சுர்ஜித்தின் தந்தை சரவணன் கைது செய்யப்பட்டதால் கவினின் உடலை பெற்றுக் கொள்ள உறவினர்கள் சம்மதம் தெரிவித்திருந்தனர். இதனிடையே போலீசாரின் தூண்டுதலின் பேரில் சுபாஷினி வீடியோ வெளியிட்டதாக கூறி, உடலை வாங்க கவினின் உறவினர்கள் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தங்களின் விசாரணையை தொடங்கியுள்ளனர். தொடர்ந்து அவர்கள் சுர்ஜித்தின் சகோதரி சுபாஷினி வேலை செய்த சித்த மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அங்கு பதிவான சிசிடிவி வீடியோ மற்றும் மருத்துவ கோப்புகளை கைப்பற்றி சிபிசிஐடி போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

Read Previous

இவற்றையெல்லாம் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கக்கூடாது..!! மீறி குடித்தால் ஆபத்து உங்களுக்குத்தான்..!!

Read Next

UPI பரிவர்த்தனை ஆக.1 (இன்று) முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular