குழந்தைகள் நம்மிடமிருந்தே அனைத்தையும் கற்றுக் கொள்கிறார்கள் என்பதை உணர்த்திய பதிவு..!! படித்ததில் சிந்திக்க வைத்தது..!!

Oplus_131072

சிந்திக்க சில நிமிடங்கள்.

குழந்தைகள் நல்ல விஷயங்களை நம்மிடமிருந்தே கற்கிறார்கள்.!

ஆகவே கவனத்துடன் நாம் அவர்களைக் கையாள வேண்டும்.!

குறைகளை மட்டுமே கூறினால் அவர்கள் வெறுப்பைத் தான் கற்பார்கள்.!

அடக்கி அடக்கி வளர்க்கப்படுபவர்கள் எதிர்த்து சண்டையிடக் கற்கிறார்கள்.!

கேலியும் கிண்டலும் செய்து வளர்த்தால் வெட்கத்துடன் ஒதுங்கியே வளர்வார்கள்.!

பணத்தைக் காட்டி வளர்க்கப்படும் குழந்தை தன்னம்பிக்கை இழப்பார்கள்.!

துன்புறுத்தலுக்கு ஆளாகும் குழந்தைகள் குற்றவாளியாகிறார்கள்.!

செல்லம் மட்டுமே அளிப்பதனால்
சிறு முகச்சுளிப்புக்கும் உடைந்துப் போவார்கள்.!

ஊக்கத்துடன் வளர்க்கப்படுபவர்கள் மன வலிமை பெறுகிறார்கள்.!

புகழ்வதை கற்றுக் கொள்ளும் குழந்தை மற்றவர்களையும் புகழும் மனதைப் பெறுகிறது.!

சகிப்பதைக் கற்றுக் கொள்ளும் குழந்தை சூழலை சரியாக அணுகக் கற்றுக் கொள்கிறார்கள்.!

புன்முறுவலைப் போதிப்பதால் பொறுமையாக இருக்கக் கற்றுக் கொள்கிறது.!

நேர்மையாய் வளர்க்கப்படும் குழந்தை நியாயத்தைக் கற்றுக் கொள்கிறது.!

நட்பைக் கற்றுக் கொடுப்பதால் உலகை நேசித்தலைக் கற்றுக் கொள்கிறது!

துணிச்சலுடன் வளர்க்கப்படும் குழந்தை உலகை வெல்கிறது.

Read Previous

கட்டியவன் கைவிட்டாலும்.. கற்ற கல்வி ஒருபோதும் கைவிடாது..!! என்பதை உணர வைத்த அருமையான பதிவு..!!

Read Next

ஞானி..!! அருமையான சிறுகதை..!! படித்ததில் சிந்திக்க வைத்த பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular