மிளகு ரசம் எப்படி செய்யணும் தெரியுமா..?? தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க..!!

Oplus_131072

மிளகு ரசம் செய்வது எப்படி

தேவையான பொருட்கள்

மிளகு – 1 தே.க ( நிரப்பி )
மல்லி – 2 மே . க ( நிரப்பி )
நற்சீரகம் – 1 தே.க ( நிரப்பி )
செத்தல் மிளகாய் – ஒன்று
உள்ளி – 8 பல்லு
பழப்புளி – ஒரு பாக்களவு ( விதை நீக்கியது)
பெருங்காயம் – ஒரு குண்டு மணியளவு
உப்பு – அளவுக்கு
தண்ணீர் – 4 தம்ளர்
தேங்காய் பூ – 3 மே. க ( நிரப்பி )

செய்முறை :

தேங்காய் பூவில் ஒரு தம்ளர் தண்ணீர் விட்டு பால் பிழிந்து கொள்க

ஒரு தம்ளர் தண்ணீரில் பழப் புலியை கரைத்து வைத்துக் கொள்ளவும்

மல்லி , சீரகம் , மிளகாய் , உள்ளி என்பவற்றை உரலில் இட்டு நன்றாக இடித்தேடுத்துக் கொள்க .

பின்பு இடித்த கலவையை பாத்திரத்திலிட்டு , தேங்காய் பால் பழ புலி கரைசல் 2 தம்ளர் தண்ணீர் என்பவற்றை விட்டு கரைத்து அளவிற்கு உப்பும் சேர்த்துக் கொதிக்க வைக்கவும் . ரசம் பொங்கி கொதித்ததும் அப்பாத்திரத்தின் மூடியில் பெருங் காயத்தை உரைத்து அம மூடியால் பாத்திரத்தை நன்றாக மூடி சிறிது நேரம் வைத்து பின்பு இறக்கி கரண்டியால் நன்றாக கலக்கிகொண்ட பின்பு வடித்தெடுத்து பரிமாறலாம்.

Read Previous

சுவாமிமலை முருகன் கோயிலை பற்றி அறியவேண்டிய தகவல்கள்..!!

Read Next

குடைமிளகாய் மசாலா அட்டகாசமான சுவையில்  இது போல் செய்து பாருங்கள் சப்பாத்திக்கு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular