குடைமிளகாய் மசாலா அட்டகாசமான சுவையில்  இது போல் செய்து பாருங்கள் சப்பாத்திக்கு..!!

Oplus_131072

குடைமிளகாய் மசாலா அட்டகாசமான சுவையில்  இது போல் செய்து பாருங்கள் சப்பாத்திக்கு..

செய்முறை

✨மிக்ஸி ஜாரில் ஒரு டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை ,ஆறு முந்திரி பருப்பு, இரண்டு பச்சை மிளகாய் ,அரை ஸ்பூன் கசகசா ,கால் கப் புதினா ,கால் கப் கொத்தமல்லி ,சிறிய துண்டு கல்பாசி சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி நன்கு மைய அரைத்து கொள்ளவும் .

✨கடாயில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அரை டீஸ்பூன் சோம்பு சேர்த்து இரண்டு பெரிய வெங்காயத்தை நீளமாக நறுக்கி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கிக் கொள்ளவும்.

✨ இரண்டு குடைமிளகாய் நீளமாக நறுக்கி சேர்த்து இரண்டு நிமிடம் மிதமான தீயில் வதக்கிக் கொள்ளவும் .

✨பின் ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கலந்து விடவும்.

✨ பின் பெரியதாக நறுக்கிய ஒரு தக்காளி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிக் கொள்ளவும். வறுத்த வேர்க்கடலை இரண்டு டேபிள் ஸ்பூன் கொரகொரப்பாக அரைத்து சேர்த்து கலந்து கொள்ளவும்.

✨ பின் தேவையான அளவு உப்பு ,மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன் வெறும் மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன் தனியாத்தூள் அரை டீஸ்பூன் கரம் மசாலா சேர்த்து ஒரு நிமிடம் நன்கு கலந்து கொள்ளவும்.

✨ பின் அரைத்த மசாலா சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் அரை கப் தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு மூடி வைத்து மூன்று நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும்.

✨ இரண்டு டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து விட்டு இரண்டு நிமிடம் கொதிவந்த பின் கொத்தமல்லி தூவி இறக்கவும்.சுவையான குடைமிளகாய் மசாலா தயார்.

Read Previous

மிளகு ரசம் எப்படி செய்யணும் தெரியுமா..?? தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

படித்ததில் மனதை கலங்க வைத்த பதிவு..!! கட்டாயம் படிங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular