கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி சிக்கியுள்ளார். யூடியூப் வீடியோ பார்த்து தனது கணவரைக் கொல்லத் திட்டமிட்டதாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். தெலுங்கானாவின் கரீம்நகரைச் சேர்ந்தவர் சம்பத், ரமாதேவி தம்பதி. குடிப்பழக்கத்திற்கு அடிமையான சம்பத் அடித்து துன்புறுத்தியதால் மனைவி பிரிந்து சென்றார். இந்த நிலையில், கள்ளக்காதலனுடக் சேர்ந்து கணவனின் காதில் பூச்சிக்கொல்லி மருந்தை ஊற்றி தீர்த்துக் கட்டியுள்ளார்.




