Oplus_131072
முருங்கைக்கீரை சூப் செய்வது எப்படி……..
தேவை:
முருங்கை இலை – ஒரு கப் தேங்காய்ப்பால் – 2 டேபிள்ஸ்பூன் பாசிப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன் கேரட் துருவல் – 2 டேபிள்ஸ்பூன் தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
தோலுரித்த சின்ன வெங்காயம் – 6 சீரகத்தூள், மிளகுத்தூள், இஞ்சி சாறு – தலா ஒரு டீஸ்பூன் பூண்டு – 3 பல் (தட்டவும்) உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
குக்கரில் முருங்கை இலை, வெங்காயம், தக்காளி, கேரட் துருவல், பூண்டு, பாசிப்பருப்பு, சிறிதளவு உப்பு, இஞ்சி சாறு, தேவையான அளவு தண்ணீர்விட்டு மூடி மூன்று விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் மிக்ஸியில் ஒரு சுற்றுவிட்டு அரைத்து வடிகட்டவும். அதனுடன் தேங்காய்ப்பால் சேர்த்து அடுப்பில் வைத்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். மேலே சீரகத்தூள், மிளகுத்தூள் தூவிச் சூடாகப் பருகவும்.




