கதவுகள் இல்லாத உங்கள் வீட்டில் வாழ்வது எப்படி இருக்கும் என்று எப்போதாவது கற்பனை செய்திருக்கிறீர்களா? அல்லது, உறங்கச் செல்லும்போது கதவுகள் மூடப்பட்டிருக்கிறதா என்று சோதிக்காமல் நம்மால் தூங்க முடியுமா..?
மகாராஷ்டிராவில் வீடுகளுக்கு கதவுகள் இல்லாத ஒரு கிராமம் உள்ளது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
இந்த அழகான சிறிய குக்கிராமம் ஷானி ஷிங்னாபூர் என்று அழைக்கப்படுகிறது, இந்த ஊரில் கதவுகள் இல்லாத வீடுகள் உள்ளது, ஆனால் கதவு சட்டங்கள் மட்டுமே உள்ளன.
சனி பகவான் (சனி கடவுள்) மீதுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையால் யாரும் திருட மாட்டார்கள் என்று கிராம மக்கள் நம்புகிறார்கள். ஷீரடியிலிருந்து 2 மணி நேர பயண தூரத்தில் உள்ள இந்த கிராமத்தில் வாழும் மக்களின் நம்பிக்கை அப்படி..!




