உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தைச் சேர்ந்த குல் பைசா என்ற பெண் பர்வேஷ் என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்தார். பின்னர், கூடுதல் வரதட்சணை கேட்டு பர்வேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் குல் பைசாவுக்கு தொல்லை கொடுத்துள்ளனர். கடந்த 12ம் தேதி வீட்டில் இருந்த ஆசிட்டை குல் பைசாவின் வாயில் ஊற்றி வலுக்கட்டாயமாக அதை குடிக்க வைத்துள்ளனர். இதனால், கடந்த 17 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த குல் பைசா நேற்று (ஆக.29) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.




