இருமல், மார்பு சளியை குணமாக்கும் சித்த மருத்துவ வைத்திய முறைகள்..!!

Oplus_131072

இருமல், மார்பு சளியை குணமாக்கும் சித்த மருத்துவ வைத்திய முறைகள்…

தலை சுற்றல் குணமாக: சுக்கு, மிளகு, திப்பிலி, விலாமிச்சை வேர், சீரகம் ஆகியவைகளை 5 கிராம் வீதம் பவுடராக்கி தினசரி காலை, மாலை அரை கரண்டி சாப்பிட தலை சுற்றல் குணமாகும்.

இருமல் குணமாக: ஜலதோஷம், காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்.

வறட்டு இருமல் குணமாக: கருவேலமரக் கொழுந்தை கசக்கி சாறு எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட வறட்டு இருமல் குறையும். வெள்ளை முதலான நோய்களும் குணமாகும்.

ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாக: முசுமுசுக்கை இலையை அரித்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாகும்.

சளிகட்டு நீங்க: தூதுவளை, ஆடாதோடா, சங்கன் இலை, கண்டங்கத்திரி இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட இறைப்பு, சளிகட்டு நீங்கும்.

தலைபாரம் குறைய: நல்லெண்ணையில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.

மார்புச்சளி நீங்க: ஏலக்காய் பொடியை நெய்யில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட மார்புச்சளி குணமாகும்.

மூக்கடைப்பு நீங்க: ரோஜா மலரை முகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கி விடும்.

ஜலதோஷம் குணமாக: முருங்கை பிஞ்சுகளை நசுக்கி சாறெடுத்து அதில் தேன் கலந்து 2 வேளை வீதம் 3 நாட்கள் சாப்பிட குணமாகும்.

வாந்தி நிற்க: துளசி சாறு, கல்கண்டு சேர்த்து காய்ச்சலின் போது கொடுக்க வாந்தி நிற்கும்.

குமட்டல்: கசப்பான மருந்து உட்கொண்டவுடன் வெற்றிலை காம்பை வாயிலிட்டு சுவைத்தால் குமட்டல் இருக்காது.

Read Previous

இரட்டைக் குழந்தை பிறந்து விட்டதா..?? கவலையை விடுங்க.. எப்படி பராமரிக்க வேண்டும் தெரியுமா..??

Read Next

தொண்டை வலி, ஒற்றை தலைவலிக்கான அற்புதமான பாட்டி வைத்தியங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular