டெல்லி: நாதக சீமான், நடிகை அளித்த பாலியல் புகார் வழக்கை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை இன்று (செப்.12) விசாரித்த நீதிமன்றம், “இருவரும் குற்றச்சாட்டுகளை திரும்ப பெற்று, மன்னிப்புக் கேட்கட்டும். ‘நடிகையை தொந்தரவு செய்யமாட்டேன்’ என சீமான் உறுதியளிக்க வேண்டும்” என நீதிபதி நாகரத்னா அறிவுறுத்தினார். சீமானுக்கு எதிரான புலன்விசாரணைக்கு இடைக்கால தடை நீட்டிக்கப்பட்டதுடன், சீமான் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை செப். 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.




