சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு, ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதே போல் நடிகை த்ரிஷா வீட்டிற்கும் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து காவல்துறையினர், வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் காலையிலேயே அப்பகுதிகளில் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.




