விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (அக்., 02) காலை, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் மையப் பகுதியில் உள்ள தடுப்புச்சுவர் மற்றும் முன்னால் சென்ற லாரி மீது மோதி தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த இருவர் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.




