திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதார பதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் பௌர்ணமி தினமான நேற்று கடல் நீர் சுமார் 60 அடி தூரம் உள்வாங்கியது. இதனால் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. ஆபத்தை உணராமல் பாறைகள் மீது நின்று பக்தர்கள் செல்பி எடுத்தனர். அவர்களுக்கு காவல்துறையினர் மற்றும் கோயில் கடற்கரை பாதுகாப்பு பணியினர் எச்சரிக்கை விடுத்தனர்.




