ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், டிசம்பர் முதல் வாரத்தில் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார். இந்த ஆண்டிறுதி உச்சிமாநாட்டில், வணிகம், ராணுவ பாதுகாப்பு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு, சுகாதாரம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், மனிதாபிமான விவகாரங்கள் குறித்து இருதரப்பிலும் விவாதிக்கப்படும். அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு மத்தியிலும், ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தகத்தை இந்தியா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.




