திருவனந்தபுரத்தில், சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்த மனைவியை மின்வயரால் கழுத்தை இறுக்கி கொன்று விட்டு கணவர் தற்கொலை செய்துகொண்டார். பாசுரன் ஆசாரியின் (73) மனைவி ஜெயந்தி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சடலமாக கிடந்துள்ளார். இதனிடையே பாசுரன் 5-வது மாடியில் இருந்து குதித்து நேற்று (அக்., 09) தற்கொலை செய்து கொண்டார். அவரை மீட்டு சிகிச்சை அளித்த போதிலும் பலனளிக்கவில்லை. மனைவியை கொன்றுவிட்டு கணவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.




