ஆந்திர பிரதேச மாநிலத்தில், தங்கையை அண்ணன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அன்னமய்யா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியின் தந்தை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். குடும்ப சூழல் காரணமாக சிறுமியின் தாயார், வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த சிறுமியை, அவரது உறக்கார அண்ணன் பலாத்காரம் செய்துள்ளார். இதில், சிறுமிக்கு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. அந்த குழந்தையை விற்க முயன்றபோது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.




