உத்தரப் பிரதேச மாநிலத்தில், தனது முன்னாள் காதலியை, இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கௌசாம்பி மாவட்டத்தைச் சேர்ந்த பல்பீர் படேல் என்ற இளைஞரும், அஞ்சலி (23) என்ற இளம்பெண்ணும் காதலித்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பெண் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டார். இதில் ஆத்திரமடைந்த பல்பீர், சம்பவத்தன்று அஞ்சலியின் வீட்டிற்குச் சென்று, கொலை செய்துள்ளார். தப்பியோடிய பல்பீரை போலீசார் காலில் சுட்டு பிடித்தனர்.




