தவெக தலைவர் விஜய் தலைமையிலான கூட்டணி சரி வராது என நடிகையும் பாஜக நிர்வாகியுமான கஸ்தூரி, தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் நேற்று (அக்.18) செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற சிந்தனை உள்ள அனைவரும் பாஜக கூட்டணியில் இணைய வேண்டும். விஜய் தலைமையிலான கூட்டணி சரி வராது” என்று விமர்சித்துள்ளார். மேலும், “விஜய்யுடன் தற்போது இருப்பவர்கள் சரியில்லை” என்றும் வெளிப்படையாக குற்றஞ்சாட்டியுள்ளார்.




