லக்ஷ்மி கடாட்சம் என்றும் வீட்டில் நிலைத்திருக்க முன்னோர்கள் கூறிய வழிமுறைகள்..!!

லக்ஷ்மி கடாட்சம் என்றும் வீட்டில் நிலைத்திருக்க முன்னோர்கள் கூறிய வழிமுறைகள்…

ஒவ்வொருவருக்கும் நம் வீட்டில் லக்ஷ்மி குடியிருந்து என்றும் நம்முடைய பண வரவு திருப்திகரமாக இருக்க வேண்டும் என நினைப்பது இயல்பான ஒன்றாகும்.
லக்ஷ்மி கடாட்சம் என்றும் நம் வீட்டில் நிலைத்து இருக்க நம் முன்னோர்கள் கூறிய வழிமுறைகளை பற்றி பார்போம்.

ஒரு சிறிய மண்கலசம் (மூடியுடன்) எடுத்து அதில் சிறிது உப்பு, சர்க்கரை, பச்சரிசி, புளி,பருப்பு, நவ தானியம், புனுகு, குங்குமப்பூ, கஸ்தூரி, ஜவ்வாது, ஐம்பொன், சிறிய வலம்புரிசங்கு, வெற்றிலை பாக்கு…. இவை அனைத்தையும் வியாழக்கிழமையே வாங்கி வைத்துக்கொள்ளவும் .

வெள்ளிகிழமை காலை 6 முதல் 7 மணிக்குள் மேற்கூறிய அனைத்து பொருளையும் கலசத்தில் இட்டு மண்கலசத்திற்கு விபூதியிட்டு சந்தனம், குங்குமம் வைத்து உங்கள் பூஜைஅறையில் வைத்து மகாலட்சுமியை மனதாற வேண்டி தாயே நீ என்றும் என் குடும்பத்தில் இருந்து அருளவேண்டும் என பிராத்தனை செய்து விட்டு தூப, தீபம் காட்டி பின்வரும் மந்திரத்தை 108முறை கூறி பின் கலசத்தை மூடி பூஜையறையில் வைக்கவும், வெள்ளிக்கிழமை தோறும் 108 முறை மந்திரம் கூறி வணங்க வேண்டும்.

108 முறை கூற வேண்டிய மந்திரம்:
ஒம் தன தான்ய லஷ்மியை வசி வசி வசியை நமஹ.

மேற்கண்ட வழிமுறைகளை கடைபிடிக்க முடியாதவர்கள் கீழே குறிப்பிட்டுள்ள உள்ள விநாயகரின் மூல மந்திரத்தினை தினமும் அதிகாலை வேலையில் பாராயணம் செய்வதால் செல்வம் என்றும் நம்முடன் நிலைத்திருக்கும் என்பது நம் முன்னோர்கள் நம்பிக்கை .
இருபத்தெட்டு அட்சரங்களை உடைய இம்மந்திரம் பலவிதமான சக்திகளையும், சித்திகளையும் அளிக்கவல்லது. செல்வம், பூமி, ஆகர்ஷணம், வசியம், முதலிய அனேக சித்திகள் இம்மந்திர ஜபத்தால் கைகூடும். அருகம்புல், தாமரை, வில்வம், செவ்வரளி போன்ற நறுமணம் உடைய புஷ்பங்களால் விநாயகரை பூஜை செய்தால் செல்வச் செழிப்பும் ஞானவளமும் கைகூடும்.

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே
வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமினய ஸ்வாஹா..

நம் வீடுகளுக்கு லக்ஷ்மியை அழைத்து வருவதற்கான சில எளிய வழிமுறைகள்:
1. எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள்.

2. வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோசமும் பெருகும்.

3. இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம். அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும்.

4. சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம்,கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தவை.

5. ஊனமுற்றவர்களுக்கோ, ஏழை மாணவர்களுக்கோ முடிந்த தர்மத்தை செய்யுங்கள்.

6. எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது. எனவே உங்கள் வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்கட்டும்.

7. வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாட்சியம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.
நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது.

8. சர்ச்சை செய்யாத சண்டையிடாத பெண்கள் வாழும் இல்லங்களில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். இரக்க குணம் உடையவர்க்கு தெய்வம் உதவி புரியும். அன்பு உள்ளம் கொண்டவர்க்கு உலகம் தலை வணங்கும்.

9. செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம். சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.

10. காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்கவேண்டும்.

Read Previous

நவம்பர் மாதம் வங்கிகள் விடுமுறை லிஸ்ட்..!!

Read Next

கால்களில் வருடங்களாக தங்கி இருக்கும் அழுக்கை 5 நிமிடத்தில் நீக்கி வெண்மையாக இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular