Oplus_131072
துளசி மிகவும் பவித்ரமானது; செல்வ கடாட்சத்தை வாரி வழங்கும் வல்லமை கொண்டது. புனிதம் மிகுந்த துளசி இருக்கும் வீட்டில் ஐஸ்வர்யத்துக்கு ஒருபோதும் குறை இருக்காது என்கின்றன ஞானநூல்கள்.
துளசி மாலையைக் கழுத்தில் அணிந்துகொண்டு, பூஜிப்பதை பத்ம புராணம் வரவேற்கிறது. ஜபம் செய்யும்போதும் துளசி மாலையைப் பயன்படுத்தலாம். கையில் துளசி மாலையை வைத்து, விரல்களால் துளசி மணியை உருட்டியபடி, மந் நாராயண நாமத்தை உச்சரித்து வழிபடுவது சிறப்பு. படித்தவர்கள், பாமரர்கள், வேதம் அறிந்தவர், அறியாதவர் என அனைவரும் எளிமையாக வழிபடும் அற்புத வழி இது.
அற்புதமான துளசி மாலையை எல்லோரும் அணியலாம். மிகவும் சக்தி வாய்ந்தது. பூஜா வேளைகளில் துளசி மாலை அணிந்துகொள்வது மிகவும் விசேஷம். அதேபோல், துளசி மாலையை பக்தர்கள் எல்லாக் காலங்களிலுமே அணிந்திருக்கலாம். அதேநேரம், வெளியிடங்களில் அதன் தூய்மை கெடாதபடி பார்த்துக்கொள்வது முக்கியம்.



