காலம் விதித்தபடி மரணம் எவ்வகையிலும் நடக்கும்..!! அருமையான சிறுகதை..!!

Oplus_131072

 

திருப்பத்தூர் என்ற சிற்றூரில் ஓர் அந்தணன் வாழ்ந்து வந்தான். அவன் தன் மனைவியுடனும் பச்சிளம் குழந்தையுடன் மிக்க மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தான்.

மதுரையில் இருந்த அந்த அண்ணனுடைய மாமன் வீட்டில் ஏதோ ஒரு விசேஷ நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அந்தணன் தன் மனைவியுடன் புறப்பட்டான். மதுரைக்குச் செல்லும் வழியில் காடு ஒன்று குறுக்கிட்டது.

அந்த காட்டில் அந்தனன் தன் மனைவி குழந்தையுடன் சிறிது நேரம் தங்கி இளைப்பாறிச் செல்ல நினைத்து ஒரு மரத்தின் நிழலில் மனைவியையும் குழந்தையையும் இருக்கச் செய்துவிட்டு உணவு உண்பதற்காக சிறிது நீர் தேடிக் கொண்டு வரும் நோக்கத்தில் அந்தணன் சென்று விட்டான்.

வழிநடந்த களைப்பால் அந்தணனின் மனைவி குழந்தையை அருகில. உறங்க வைத்துவிட்டு தானும் உறக்கத்தில் ஆழ்ந்தாள்.

அந்தணனின் மனைவி படுத்திருந்த இடத்திற்கு நேரெதிரே மரக்கிளையின் இலைகளில் எப்பொழுது யாரோ ஒரு வேடன் விடுத்த அம்பு தொத்திக் கிடந்தது காற்று பலமாக வீசியபோது அந்த அம்பு விடுபட்டு கீழே நழுவியது. நழுவிய அம்பின் முனை நேராக அந்தணது மனைவியின் வயிற்றில் பாய்ந்தது விஷம் தோய்ந்த அந்த கூர்மையான அம்பு அந்தணனுடைய மனைவியின் உயிரைப் போக்கிவிட்டது. அதே நேரத்தில் காட்டில் அலைந்து வேட்டையாடி களைத்த ஒரு வேடன் அதே மரத்தின் நிழலில் வேறொரு பக்கமாக ஒதுங்கி நின்று இளைப்பாறினான்.

சற்று நேரம் கழித்து அந்தணர் நீருடன் திரும்பி வந்தான். அம்பினால் தாக்கப்பட்டு தனது மனைவி இரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதைக் கண்டு அந்தணன் பதறினான். கதறி அழுதான். மரத்தின் பிறிதோர் பக்கத்தில் வில்லம்புடன் நின்ற வேடனை கண்டதும் அந்த வேடனே மனைவியை கொன்றிருக்க கூடும் என்று அந்தணன் தீர்மானித்துக் கொண்டான்.

வேடா என் மனைவியை ஒரு காரணமும் இன்றி அம்பால் அடித்து கொல்லலாமா? என்று ஆத்திரத்துடன் வினவினான்.

வேடன் தன் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டை கண்டு திகைத்தான். அந்தப் பாவத்தை நான் செய்யவே இல்லை என்று எவ்வளவோ மறுத்து கூறினான்.

அந்தணன் அவன் கூற்றை நம்பவில்லை. பலாத்காரமாக வேடனை மன்னனிடம் இழுத்துச் சென்றான்.

அப்போது மதுரையை ஆண்டு கொண்டிருந்த மன்னவன் பெயர் குலோத்துங்க பாண்டியன்.

குலோத்துங்க பாண்டியன் தெய்வ பக்தி நிரம்பியவன். நீதி நியாயத்திற்கு மதிப்பளிப்பவன். அநீதி கண்டு அஞ்சுபவன். குலோத்துங்கன் இருதரப்பு வாதங்களையும் கேட்டான். அந்தணனின் மனைவி ஒரு அம்பினால் கொலை உண்டு கிடப்பது உண்மை. ஆனால் அந்த அம்பை எய்தது அந்த வேடன்தானா? அரசன் தன் அதிகாரிகளை விட்டு வேடனை கடுமையாக சித்திரவதை செய்து உண்மையை தருவிக்குமாறு சொன்னான்.

என்ன செய்தும் வேடன் தான் குற்றவாளி அல்ல என்று சாதித்தான். வேடனுடைய முகத்தைப் பார்த்தாலும் அவன் அந்த குற்றத்தை செய்திருப்பான் என்று அரசனால் நம்ப முடியவில்லை. இந்த தர்ம சங்கட நிலைக்கு என்ன செய்வது? மன்னன் வேடனை சிறையில் அடைக்க ஏற்பாடு செய்துவிட்டு அந்தணனை நோக்கி பெரியவரே முதலில் உமது மனைவியின் இறுதிச்சடங்குகளை முறைப்படி செய்து முடிக்க ஏற்பாடுகளை செய்யுங்கள். நான் இன்று இரவு இந்த வழக்கு குறித்து தீவிரமாக யோசித்து நாளை முறையாக தீர்ப்பு வழங்குகிறேன் என்றான்.

அன்று மாலை மன்னன் இறைவன் திருக்கோவிலுக்குச் சென்று இறைவனிடம் முறையிட்டு அந்த சிக்கலான வழக்கில் நீதி வழங்க தனக்கு உதவுமாறு மன்றாடி வேண்டிக்கொண்டார்.

அப்போது ஒரு அசரீரி குரல் மன்னவனே நாளை காலை மாறுவேடம் பூண்டு வழக்குரைத்த அந்தணனை அழைத்துக் கொண்டு செட்டி தெருவில் நடைபெறவிருக்கும் ஒரு திருமணத்துக்கு செல்லவும். வழக்கு தொடர்பான உண்மை விளங்கும் என்று கூறியது.

அந்தக் குரல் ஆண்டவன் தனக்கிட்ட கட்டளை என்பதை அரசன் உணர்ந்தான். மறுநாள் மன்னன் மாறுவேடம் தரித்து அந்தணனையும் அழைத்துக் கொண்டு செட்டி தெரு திருமணத்திற்கு சென்று கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்தான்.

அவர்களுக்கு அருகில் இரண்டு எமது தூதர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை மன்னனும் அந்தணனும் இறைவன் கருணையால் பார்க்கவும் பேசுவதை கேட்கவும் முடிந்தது.

தூதர்களில் ஒருவன் அண்ணே மனமேடையில் அமர்ந்திருக்கும் மணமகனின் உயிரை வாங்க நமது தலைவன் உத்தரவுப்படி வந்திருக்கிறோம். மணமகனோ நோய் நொடி இன்றி திடகாத்திர உடலோடு திகழ்கிறான். அவன் உயிரை எவ்விதம் வாங்குவது? என்று கேட்டான்.

அதற்கு மற்றவன் இதற்காகவா கவலைப்படுகிறாய்? நேற்று காட்டில் மரத்தடியில் படுத்திருந்த அந்தணனின் மனைவியை மரக்கிளையில் சிக்கிக் கிடந்த அம்பினை நழுவச் செய்து உயிரை வாங்கவில்லையா? அதே மாதிரி வாசலில் கட்டப்பட்டிருக்கும் பசுமாட்டை மணவிழா ஆர்ப்பாட்டத்தால் வெறி கொள்ளச் செய்து அந்த மாட்டை ஏவி மணமகனை கொல்ல வேண்டியதுதான் என்று மறுமொழி புகன்றான்.

மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்ட போகும் தருணத்தில் கெட்டிமேளம் முழங்கியது. அந்த ஆராவாரத்தில் பசு மாடு வெறிகொண்டு கட்டை அறுத்துக் கொண்டு மணமகனை நோக்கி விரைந்து சென்று தன் கொம்பினால் மணமகனை குத்தி கிழித்தது. மணமகன் உடனே உயிரிழந்தான்.

அந்த காட்சியை கண்ட அந்தணன் குற்றம் சாட்டப்பட்ட வேடன் நிரபராதி என்பதை உணர்ந்து மன அமைதி பெற்றார்.

மன்னனும் நிலைமை தெரிந்து அரண்மனை திரும்பி வேடனை உடனடியாக விடுதலை செய்து விட்டார்.

மரணம் என்பது மனிதனுக்கு இறைவன் விதித்த விதியின் படியே நடக்கும். தனிப்பட்ட எந்த நபரும் நிகழ்ச்சியும் அதற்கு காரணமாக இருந்தாலும் எல்லாம் இறைவன் சித்தப்படியே தான் நடக்கும்.

Read Previous

சர்க்கரை நோயாளிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் இந்த பதிவு..!! கண்டிப்பா படிங்க..!!

Read Next

சிறுநீரக பாதிப்பை உணர்த்தும் அறிகுறிகள்..!! இனியும் அலட்சியம் வேண்டாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular