மது அருந்துவதால் பல பிரச்சனைகள் ஏற்படும் உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் என்று கூறினாலும் ஒரு சிலர் இந்த பழக்கத்தை மட்டும் விடுவதே இல்லை. இதனால் பல குடும்பங்கள் இருந்த தடம் கூட தெரியாமல் அழிந்து போய் இருக்கிறது என்று கூட கூறலாம். இந்நிலையில் மது அருந்துவதால் உடல் உறுப்புகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
மூளை ஆல்கஹால் மூளையை அடைந்ததும் உடனடியாக உடலின் செயல் திறன் மற்றும் நடத்தையில் மாற்றம் ஏற்படும். சுய கட்டுப்பாடு இல்லாமல் போகும். மது அருந்தும் போது நினைவுத்த தடுமாற்றம் மற்றும் நினைவு இழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
ஆல்கஹால் தொண்டை அல்லது உணவு குழாயில் புண் மற்றும் புற்றுநோயை ஏற்படுத்தும்.
ஆல்கஹால் இதய தசையை பாதித்து வலு விளக்கச் செய்து உயர் ரத்த அழுத்தம் மற்றும் சீரற்ற இதயத்துடிப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் இதனால் மாரடைப்பு மற்றும் இதய செயல் இழப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
மது அருந்துவதால் கல்லீரல் செல்களை பாதித்து பேட்டி லிவர் பிரச்சனையையும் கடைசியில் சிரோசிஸ் எனப்படும் கல்லீரல் சுருக்கம் என்ற நோயையும் ஏற்படுத்தும். வயிற்றுக்குள் செல்லும் ஆல்கஹால் நேரடியாக ரத்தத்தில் கலக்கிறது. இதனால் பசியின்மை ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும். மதுவிலுள்ள அதிகப்படியான ஆல்கஹால் இரைப்பையின் சுவரை பாதித்து வயிற்றுப் புண்ணை ஏற்படுத்தும். மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து எந்த ஒரு நோயும் எளிதில் தாக்கும் வகையில் உடலை மாற்றிவிடும்.




