மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட தகவலின்படி, உலகளவில் பாதுகாப்புக்கான நட்புறவில் நம்பிக்கைக்குரியவர்கள் என்ற வகையில் இந்திய கடற்படையினர் சீ கிங் ஹெலிகாப்டரை உதவிக்கு அனுப்பி வைத்தனர். அதன் உதவியுடன், உடல்நலம் பாதிக்கப்பட்ட ஜப்பானியர் மீட்கப்பட்டு, வான் வழியே கொண்டு வரப்பட்டு கடற்படை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கை இந்தியா மற்றும் ஜப்பானுக்கு இடையேயான வலிமையான சர்வதேச கடல்சார் ஒத்துழைப்பை பிரதிபலிக்கிறது.




