விழுதி இலை பொடியால் நுரையீரல் பலம் பெறும் வழி – தினசரி நடைமுறை..!!

 

மனித உடலின் உயிர்நாடி அதன் மூச்சுக்காற்றின் சக்தியாக விளங்கும் நுரையீரல். இதில் ஏற்படும் பலவீனங்கள், சுவாச கோளாறுகள், ஆஸ்துமா, மூச்சுத்திணறல், களைப்பு போன்றவற்றை உருவாக்கும். ஆனால், பழமையான சித்த மருத்துவத்தில் கூறப்படும் ஒரு எளிய, இயற்கையான மற்றும் அற்புதமான வைத்தியம் இவைகளை அனைத்தையும் தவிர்க்க உதவுகிறது. அது தான் — விழுதி இலை பொடி வைத்தியம்.

விழுதி இலை பொடி நீரை பருகுவதால் தினசரி நடந்தால் கூட மூச்சு வாங்கும் படி ஏற முடியாமல் ஏற்படும் மேல் மூச்சு, களைப்பு, சோர்வு ஆகியவை வராது.

சாதாரணமாக சில நிமிடங்கள் ஓடினாலே மூச்சு விட திணறல் ஏற்படும் நிலையில், விழுதி இலை பொடி வைத்தியத்தால் உங்கள் சுவாசம் மெதுவாக, சீராகும். இது உங்கள் நுரையீரல் நன்கு பலம் பெறும்

தனி விழுதி இலை பொடியாகவும் பருகலாம் அல்லது சுவைக்காக தேவை பட்டால் மிளகு சீரகம் மஞ்சள் சேர்த்தும் அருந்தலாம்

தினமும் காலை மற்றும் இரவு, வெந்நீர் பயன்படுத்தி அரை தேக்கரண்டி அளவில் கலந்து வெது வெதுப்பாக பருக வேண்டும்.

இந்தச் சிகிச்சையை ஒரு மண்டல காலம் (48 நாட்கள்) தொடர்ந்து மேற்கொண்டால் நுரையீரல் பலம் பெற்று உடல் முழுமையாக இயங்கும்.

விழுதி இலை பொடியை ரசத்தில் தூவி சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடுவதும் வாதத்திற்கு நல்ல பலன் தரும்

தினசரி ரசத்தில் விழுதி இலை பொடியை சேர்த்து சாப்பிட்டு வந்தால்

உடலில் இருக்கின்ற வாத நீர்கள் வெளியேறும் வாத நோய்கள் விலகும் மூட்டு வலி, மலச்சிக்கல், மூளை சூடு, களைப்பு ஆகியவை குறையும்.ஜீரண சக்தி அதிகரிக்கும் நுரையீரல் பலம் பெறும் சுவாசத் திணறல், ஆஸ்துமா, மேல் மூச்சு, மூக்கடைப்பு, சளி போன்றவை நீங்கும் உடல் களைப்பு நீங்கும் உடலில் சக்தி குறைவு இருந்தால் தினசரி பயன்பாடு மூலம் சுறுசுறுப்பாக இயங்கும்

மூன்று தோஷங்களை சமப்படுத்தும்
வாதம், பித்தம், கபம் ஆகியவை சம நிலைக்கு வந்தால் நோய்கள் தானாக விலகும்

வெள்ளை வெட்டை, கருப்பை கோளாறுகள், மாதவிடாய் சீர்கேடுகள் நரம்பு தளர்ச்சி நீங்கி நரம்பு பலம் பெறும்

தேவையற்ற கொழுப்பு குறையும் கொழுப்புக் கட்டி மேல் பூசி மசாஜ் செய்து வந்தால் கொழுப்புக்கட்டி குறைந்து மறையும்

மூட்டு வலி & காய்ச்சல் குறைவு
உடலில் எங்கிருந்தும் தோன்றும் வலி, சோர்வு, வீக்கம் குறையும்

நுரையீரலுக்கு உகந்த மருந்து

ஆண்கள், பெண்கள், வயதானோர், குழந்தைகள் அனைவரும் பயன் படுத்தலாம்.

Read Previous

பரிகார மலர்கள்..!! மாரியம்மனுக்குப் பிரியமான தாழம்பூ பண வரவை அதிகமாக்கும் அதிசயம்..!!

Read Next

வெட்டிவேரில் உள்ள மருத்துவ குணங்கள்..!! நீங்கள் அறியாதவை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular