ஆதி காலத்தில் இருந்து நமது முன்னோர்கள் வெற்றிலை போடாமல் இருப்பதில்லை சாப்பிட்ட பிறகு சாப்பாடு ஜீரணம் ஆகுவதற்கும் சோர்வு தன்மையை நீக்குவதற்கும் வெற்றிலை சிறந்த காரணி ஆக பயன்படுகிறது..
அப்படி இருக்கும் பட்சத்தில் வீட்டில் குழந்தைகள் சரியாக படிக்கவில்லை படிப்பில் தடுமாற்றம் உள்ளது ஞாபகம் வருது அதிகமாக உள்ளது படிப்பதை மறந்து விடுகிறது படிப்பில் கவனம் இருப்பது கிடையாது என சொல்பவர்கள் ஒன்பது என்ற எண்ணிக்கையில் வெற்றிலை கட்டுக்குள் வைத்து மாலை கட்டி விநாயகர் அல்லது அனுமானுக்கு சாற்ற வேண்டும், மகன் எந்த வேலையிலும் நிரந்தரமாக இருப்பதில்லை குடும்பத்தில் ஏகப்பட்ட குழப்பங்கள் சண்டைகள் கோவிலுக்கு செல்ல முடியவில்லை. பூஜை செய்ய முடியவில்லை மனதில் சஞ்சலங்கள் ஏற்படுகிறது என்றால் 11 வெற்றிலையை மாலையாக கட்டி, விநாயகர் சுவாமிக்கு சாற்ற வேண்டும், வீட்டில் பணம் வரவு அதிகரிக்க வேண்டுமென்றால் பணக்கஷ்டம் தீர வேண்டும் என்றால் திருமண தடைகள் விலக வேண்டும் வீட்டில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெற வேண்டும் என்றால் 21 வெற்றிலைகளை பாக்குடன் சேர்த்து மாலையாக கட்டி ஆஞ்சநேயருக்கு அணிவிக்க வேண்டும் இதை ஆஞ்சநேயர் மற்றும் குரு பகவானுக்கு உகந்து வியாழக்கிழமையில் அல்லது சனிக்கிழமையில் சாற்றுவது மிகவும் விசேஷமானதாகும், மேலும் வெற்றிலை நமது உடலுக்கு செரிமான பிரச்சனையை நீக்குவதற்கு பயன்படுகிறது..!!




