கோவை அரசூரில் உள்ள கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியில், ஈஷா மண் காப்போம் இயக்கம் இணைந்து ‘வீட்டிலிருந்தே வருமானம் 2.O’ கருத்தரங்கை மார்ச் 8-ம் தேதி நடத்துகிறது. உணவு, இயற்கை விவசாயம், மதிப்புக்கூட்டல் துறைகளில் வெற்றி பெற்ற பெண் தொழில்முனைவோர் வழிகாட்ட உள்ளனர். 2,000 பெண்கள் பங்கேற்க உள்ளனர். 6 சிறந்த தொழில்முனைவோருக்கு விருது வழங்கப்பட உள்ளது. இதில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம்.




