கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே ஒபகவலசை கிராமத்தில் கணவரை கொலை செய்துவிட்டு அவரது மனைவியை மர்ம நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டிற்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்த 75 வயது முதியவரை அடித்து கொன்றுவிட்டு, வீட்டிற்குள் நுழைந்து அவரின் 70 வயது மனைவியை மர்ம நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் குற்றவாளியை தேடிவருகின்றனர்.




