வீட்டில் எந்த இடத்தில் கிராம்பு வைத்தால் என்ன பயன் தெரியுமா?..

வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் கிராம்பை வாஸ்துப்படி வீட்டில் எந்த இடத்தில் வைத்தால் என்ன பயன் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

 

 

 

கிராம்பு

கிராம்பு மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு பொருளாகும். இந்த கிராம்பு சமையலுக்கு மட்டுமன்றி இது பல வாஸ்து நம்பிக்கைகளையும் கொண்டது.

 

 

இதை வீட்டில் ஒரு சில இடங்களில் வைக்கும் போது அது வீட்டில் நல்ல சக்திகளை ஈர்க்ககூடிய சக்தியை கொண்டது. அதனால் இது வீட்டில் வரக்கூடிய பிரச்சனைகளையும் தீர்க்கவல்லது.

வாஸ்து படி இரண்டு கிராம்புகளை மட்டும் தலையணைக்கு அடியில் வைத்திருந்தால் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.

 

 

இரவில் கெட்ட கனவுகள் வரும் போது இந்த கிராம்புகள் துணையாக இருக்கும். நிம்மதியான உறக்கத்திற்கும் வழி வகுக்கும். பூஜை அறையில் கிராம்பு மற்றும் உப்பு சேர்த்து வைத்தால் தெய்வத்தின் சத்தி அதாவது நல்ல சக்தி வீடு தேடி வரும்.

 

இதனால் நமது நிதி நிலைமைகளில் உள்ள சிக்கல்கள் விலகி நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வீட்டில் பணம் வைத்திருக்கும் இடத்தில் படிக்கார கல்லுடன் இந்த கிராம்பை சேர்த்து வைத்தால் பணத்திற்கு பஞ்சமே வராது என்று நம்பப்படுகிறது.

Read Previous

கமகம மாம்பழ கேசரி செய்து சாப்பிட்டு இருக்கீங்களா?.. ரெசிபி இதோ..!!

Read Next

அடிப்பிடித்து கருகிப்போன பாத்திரத்தை எவ்வாறு சுத்தம் செய்வது?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular