Oplus_131072
பித்தவெடிப்பு என்பது பொதுவாக ஆண்,பெண் அனைவருக்குமே ஏற்படும் ஒரு உடல் சார்ந்த பிரச்சனை தான். இப்பாதிப்பு உடலின் முக்குணங்களான வாத, பித்த, கபம் ஆகியவற்றில் பித்தம் அதிகரித்து உடலின் முக்குண சமநிலைபாதிக்கப்படுவதாலும், சிலநுண்ணியக்கிருமிகளாலும் ஏற்பட்டு நாம் நடக்கும் போது சிலசமயம்வலியைஏற்படுத்துகிறது. இந்த பாதிப்புகளை நீக்குவதற்கான
*சித்த மருத்துவம்*
சார்ந்த வழிமுறைகளை இங்கு காண்போம்.
காலையில் தூக்கத்திலிருந்து எழுந்த பின்பும், இரவு தூங்குவதற்கு முன்பும்,ஒருஅகன்றபாத்திரத்தில் வெந்நீர் ஊற்றிச் சிறிது கல்லுப்புக் கலந்து பாதங்களை ஒரு 15 நிமிடம் வைத்திருந்து எடுக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர, பாதத்திலுள்ள வெடிப்புகளில் இருக்கும் நுண்ணியக் கிருமிகள் அழிந்து, இறந்த பாத தோல் பொறுக்குகள் உதிர்ந்து, புதிய தோல் வளர்ந்து வெடிப்புகள் மறையும்.
சிறிது வேப்பிலை, சிறிது மருதாணி இலை, மஞ்சள் ஆகிய மூன்றையும் சேர்த்து நன்கு மைப் போல் அரைத்து பாத வெடிப்புகளில் தடவி வர பித்தவெடிப்பு நீங்கும்.
தேனையும், சுண்ணாம்பையும் சம அளவுச் சேர்த்து நன்கு கலக்கிக்,குழைத்துபாதங்களில் இரவு உறங்கும் முன்பு தடவ வேண்டும்.இதை வாரத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும். இதன் மூலம் பாத வெடிப்பு குறையும்.
கற்றாழையை பசைப் போல் நன்கு அரைத்துக் கொண்டு,இரவுபாதவெடிப்புகளில்,தடவிசுத்தமானகாலுறைகளை அணிந்து கொண்டு உறங்க வேண்டும். இதை தினமும்செய்யசீக்கிரத்திலேயே பாத வெடிப்புகள் மறையும். சித்தர்கள் அருளிய சித்த மருத்துவம் மூலம் பூரணமாக முழுமையாக குணப்படுத்த முடியும்.




