சித்திரை வருடப்பிறப்பு அன்று மருத்துநீர் வைத்து நீராடுவது காலம்காலமாக கடைப்பிடிக்கும் முறை..!!

Oplus_131072

 

மருத்து நீர் என்பது தாழம்பூ, தாமரைப் பூ, மாதுளம் பூ, துளசி, விஷ்ணுக்கிரந்தி, சீதேவியார், செங்கழுநீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், மிளகு, திப்பிலி, சுக்கு இவைகளை சுத்தமாக நீரில் கொதிக்க வைத்து காய்ச்சி எடுப்பதாகும்.

எனினும் நடைமுறையில் இவைகள் பெற்றுக்கொள்வது என்பது சாத்தியமில்லை என்பதால், இந்துக்கள் யாவரும் குழப்பமடையாது, தமது வீடுகளுக்கு அருகில் கிடைக்கக்கூடிய அறுகு, துளசி, வேப்பிலை ஆகியவற்றை மஞ்சள், பால் கலந்த சுத்த நீரில் மிளகு, சுக்கு இட்டு, நன்கு கொதிக்க வைத்து காய்ச்சி சிரசிலும், பாதத்திலும் வைத்து நீராடுவது காலோசிதமாகும். மருத்து நீர் தலையில் கொன்றை இலையும் காலில் புங்கை இலையும் வைத்து சித்திரை புத்தாண்டு புண்ணியகாலத்தில் நீராடினால் நற்பலன்கள் கிடைக்கும்.

மருத்து நீரை மூலிகை மருந்துக்களின் சங்கமம் என்றே கூற வேண்டும்.

 

Read Previous

கருப்புக்கவுனி அரிசியின் நன்மைகள்..!!

Read Next

கொங்குநாட்டு தேங்காய் சட்னி செய்வது எப்படி..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular