நாடு முழுவதும் எல்பிஜி எரிவாயு விநியோகம் எந்தவித இடையூறும் இன்றி தொடரும் என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. திருமண, பண்டிகைக் காலங்களில் தேவை அதிகரித்துள்ளதால், எண்ணெய் நிறுவனங்கள் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன. வழக்கமான ஒதுக்கீட்டிற்கு மேல் கூடுதல் சிலிண்டர்கள் தேவைப்பட்டால், திருமண அழைப்பிதழ் போன்ற ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம். நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாகக் கட்டணம் கோரப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் புகார் அளிக்கலாம்.




