கோடை வெப்பம் காரணமாக தமிழகச் சந்தைகளுக்கு வரும் காய்கறிகளின் வரத்து 50% சரிந்துள்ளது. இதன் விளைவாக, சென்னை கோயம்பேடு உள்ளிட்ட சந்தைகளில் தக்காளி, கேரட், பீன்ஸ் போன்ற காய்கறிகளின் விலை கிலோவிற்கு ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்ந்துள்ளது. மே மற்றும் ஜூன் மாதங்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தால், வரத்து குறைந்து காய்கறிகளின் விலை இன்னும் 10-15% வரை உயரக்கூடும் என வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.




