வாழ்க்கையில் நம்பிக்கை என்பது எவ்வளவு முக்கியம் என்பதை இந்த பதிவு உணர்த்துகிறது..!!

வசந்தம் ஒரே நாளில் மலர்ந்து விடுவதில்லை. இரை எந்தக் கண்டத்தில் இருந்தாலென்ன? இறக்கையாய் உந்து சக்தி இருக்கையில் இலக்கு எத்தனை தொலைவில் இருந்தாலென்ன.. ஈட்டியாய்ப் பாயும் நம்பிக்கை இருக்கையில்.

நம்பிக்கை நற்கனவை நனவாக்கி விடும். அவநம்பிக்கை உங்கள் வாழ்க்கையையே கனவாக்கி விடும்.

உங்களுக்கு அடுத்தவரைப் பிடிக்கவில்லையா? ஒதுங்கிக் கொள்ளுங்கள்.

உங்களைப் பிடிக்கவில்லையா? நீங்கள் தலை சிறந்தவன் என நிரூபித்து விடுங்கள்.

மனிதனுக்குத் துணிச்சலைப் போல உலகில் உண்மையான நண்பன் வேறு யாருமில்லை.

ஒரு செயலைத் தொடங்குவதற்கு நோக்கம் தேவை ஆனால் அச்செயலைத் தொடர்ச்சியாகச் செய்ய ஊக்கமும் ஒழுக்கமும் தேவை.

உங்களால் முடியும் என்ற மந்திர சொல்லை உங்கள் மனதில் சொல்லிக் கொண்டே இருங்கள். முடியாது என்ற சொல்லை நீங்களே மறந்து விடுவீர்கள்.

வெற்றியின் ஒளி உங்கள் கண் முன் தோன்றும், உங்களுடைய அனைத்து செயல்களும் வெற்றியில் முடியும்.

கடந்து போனதை பற்றி கவலைப்படாதீர்கள். அதில் நன்மை இருந்திருந்தால் நீடித்திருக்கும்.

கடினம் என நினைத்தால் கரைசேர முடியாது. கடந்து பார்ப்போம் என நினையுங்கள். எதையும் உங்களால் அடைய முடியும்.

Read Previous

இறந்தவர்களை ஏன் சூரியன் மறைவதற்குள் எரித்துவிட வேண்டும் என்று கூறுகிறார்கள் தெரியுமா..??

Read Next

இது கதையா, இல்லை உண்மையாவென்று தெரியவில்லை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular