Oplus_131072
நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன் நுரையீரலுக்குள் சென்றுஅங்கிருந்து சிவப்பு ரத்த அணுக்கள் வழியாக உடல் முழுவதும் செல்கிறது.
நமது உடலில் செல்களுக்குள் இருக்கும் மைட்டோகாண்ட்ரியா இந்த ஆக்ஸிஜனை கொண்டு உணவை ஆற்றலாக மாற்றி உடல்முழுமைக்கும் தருகிறது.
இந்த செயல்பாட்டில்
உற்பத்தியாகும் கார்பன் டை ஆக்சைடுமீண்டும் சிவப்பு ரத்த அணுக்கள் வழியாக நுரையீரலுக்கு எடுத்து செல்லப்பட்டு, வெளியே விடப்படுகிறது.
பூமியில் இருக்கும் காற்றில் கலந்திருக்கும் 21% ஆக்சிஜன் தான் நம்மை உயிர் வாழ வைத்துக்
கொண்டிருக்கிறது. இந்த 21% ஆக்சிஜனில் 1% குறைந்தால் கூட, உடலில்நிறையபாதிப்பைஏற்படுத்தும். சுமார் 5% குறைந்தால்அனைத்து உயிருக்கும் ஆபத்துதான்.
இந்த 21% ஆக்சிஜனே உலகிலுள்ள அனைவரும் உயிர்வாழ போதுமானது. இதைக் கெடுக்காமல், இது இன்னும் குறையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
இக்காரியம் சரியாக,நடக்க வேண்டுமெனில்,அதை மரங்களின்,செயல்பாடே சீராக்கும்.
மரங்கள் மழை நீரை நிலத்தினுல் பரவச்செய்கின்றன.தன்னலமற்ற,மலர்களை,கனிகளை,பிராணவாயுவகைத் தருகின்றன.
எனவே,வீட்டிற்கு,ஒவ்வொருவரும்,
மரம் வைப்போம்.வளர்ப்போம்.
நல்லஎதிர்காலத்தைஉருவாக்குவோம்.




