Oplus_131072
தேவையான பொருட்கள்:
சிக்கன் – கால் கிலோ
வெங்காயம் – 1
தக்காளி – 1
இஞ்சி,பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் – சிட்டிகை
மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
பட்டை, லவங்கம் – தலா 2 துண்டுகள்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கருவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை:
சிக்கனை கழுவி, சிறிய துண்டுகளாக வெட்டவும். தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். இஞ்சி, பூண்டை நசுக்கிப் போடலாம். விழுது இருந்தால் அப்படியே சேர்க்கலாம்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, லவங்கம் போட்டு தாளித்து வெங்காயம், தக்காளியைச் சேர்த்து வதகுங்கள். தீயவிடாமல் தேவையெனில் சிறிது எண்ணெய் சேர்த்து கிளறுங்கள். இதில் ம. தூள், மி.தூள், உப்பு சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டுங்கள். வாசனை கமரும்போது சிக்கனைச் சேர்த்து வதங்கள். எல்லாவற்றையும் மிதமான தீயில் அடுப்பை வைத்துக் கொண்டு செய்யுங்கள்.
சிக்கனில் காரக் கலவை நன்றாக சேர்ந்து வரும்படி கலந்து விடவும். தண்ணீர் விட வேண்டாம். சிக்கனில் இருக்கும் நீரும், தக்காளி சாறும் எண்ணெய்யும் சிக்கனை வேக வைக்கும். தீயாதபடி அவ்வப்போது கிளறுங்கள். சிக்கன் நன்றாக வெந்தபிறகு மிளகுதூள் சேர்த்து கிளறி கருவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்குங்கள். சுவையான சிக்கன் தொக்கு தயார்.




