சிவாலயங்களில் மட்டும் சிவனின் உருவமில்லாமல் இலிங்கத்தை வழிபடுவது ஏன்..??

Oplus_131072

 

இந்த பிரபஞ்சத்தில், அணைத்து நட்சத்திரங்களும், கோள்களும் ஏறத்தாழ முட்டை வடிவிலான நீள்வட்ட பாதையில் சுற்றி வரும். இந்த முட்டை வடிவிலான நீள்வட்ட பாதையின் அடையாளம் லிங்கம். ஆவுடை பிரபஞ்சம்.

இந்த பிரபஞ்சத்தையும், பிரபஞ்சத்தின் இயக்கத்தையும் அடையாளப்படுத்தும் விதமாக ஆவுடையும், அதன் லிங்கமும் அமைந்திருக்கிறது.

அகல் விளக்கை ஏற்றும் போது, விளக்கொளி தன்னைத்தானே இயற்கையின் தூண்டுதலால் ஒரு லிங்க வடிவமாய் தகவமைத்துக் கொள்கிறது. அகல் விளக்கொளி லிங்க ரூபம். அகல் விளக்கு ஆவுடை ரூபம். இது ஒரு உதாரணம். புரிதலின் எளிமைக்காக.

எந்த பொருளின் அணு துகள்களின் உட்கூறாய் நாம் கூறும் electron, proton, neutron இவைகளின் சுற்றுவட்ட பாதையும் நீள்வட்ட பாதையே. இவ்வாறு இந்த பூமி, பிரபஞ்சம் இவற்றில் உள்ள அணைத்து வகை பொருட்களின் அணுக்கூறுகளின் இயக்கத்தின் நீள்வட்ட பாதையை அடையாளப்படுத்துவது லிங்கம். அணுக்கூறுகளை அடையாளப் படுத்துவது ஆவுடை.

சூரியனை வழிபடுவது போல், இந்த பிரபஞ்சத்தையும், அதன் இயக்கத்தையும் ஒரு அடையாளமாக்கி அதை வழிபடுவது சிவலிங்க வழிபாடு என்பது என் கருத்து. கற்பனை கூட.

வழிபாடு என்பது ஒரு நன்றிக்கடன். அன்றாட வாழ்விற்கு ஆதாரமாய் இருக்கும் சூரியனை நன்றி செலுத்த வழிபடுவது போல், எத்தனை பிறப்பெடுத்தாலும் இந்த பிரபஞ்சத்தில் அணுக்கூறுகளையும், அதன் இயக்கத்தையும் நம்பியே நம் பிறப்புக்களும் வாழ்வும் அமையும் என்பதால், அதற்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த சிவலிங்க வழிபாடு.

இதை ஆண்குறி, பெண்குறியாய் பார்க்கும் வீணர்களுக்கு இதெல்லாம் புரியாது. பிரபஞ்சம், மற்றும் அதன் இயக்கமாய் பார்க்கும் மதியுள்ளவர்களுக்கு அதன் பிரம்மாண்டம் புரியாமல் இருக்காது.

சரி, அப்படி பார்த்தால் சிவலிங்கம் இந்த பிரபஞ்சத்தின் அடையாளம் தானே, நன்றி சொல்லுதற் பொருட்டு வழிபடல் சரி, ஆனால் வழிபட்டு பிரார்த்தனை வைத்தால் பலிக்கிறதே என வினவலாம். அது கடவுள் என்கிற நம்பிக்கையில், கூட்டம் கூட்டமாய் வந்து மக்கள் வழிபடும் போது வழிபடுபவர் ஒவ்வொருவரிடமிருந்தும் சக்தி பரிமாற்றம் சிவலிங்க ரூபத்தில் நடைபெற்று, சிறு துளி பெருவெள்ளமாய் சேர்ந்து, அதில் சக்தி பிரவாகம் ஊற்றெடுக்கிறது. சக்தி இல்லையேல் சிவம் இல்லை.அதன் வீரியத்தில், பிரார்த்திப்போரின் பிரார்த்தனை பலிக்கிறது.

சிலலிங்கத்தை வழிபடுபவர்களின் அணுக்கூறுகளின் இயக்கமும் பிரபஞ்சத்தின் அணுக்கூறுகளின் இயக்கமும் ஒரே மாதிரியே. ஏனெனில் சிவபக்தர்கள் இந்த பிரபஞ்சத்தின் ஒரு அங்கம்.

இந்த பிரபஞ்சம் அளவிடற்கரிய அளப்பரிய சக்தி கொண்டது. விநோதம் என்னவெனில் நாமும் அதன் ஒரு அங்கம் என்பதை நாம் எவ்வகையிலும் முழுமையாக உணராதிருப்பது.

உணர்ந்தவர் விண்டவர். விண்டவர் கண்டிலர், கண்டவர் விண்டிலர். எல்லாம் இறைமயம். இறைமயம் நம் பிரபஞ்ச இயக்கம். அதன் அடைமொழி சிவசொரூபம்.

எளிமையாக சொல்வதென்றால் மனித உரு லிங்கம், மனிதரை தாங்கி நிற்கும் பூமி ஆவுடை.

Read Previous

அதிவிடயத்தின் முக்கிய மருத்துவப் பயன்கள்..!!

Read Next

பயப்படாதே மகனே நான் அடுத்த பெட்டியில் இருக்கிறேன்..!! அருமையான சிறுகதை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular