ஆன்மிகம் – Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் – Tamilyugam https://tamilyugam.in Mon, 15 Jun 2026 11:44:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://tamilyugam.in/wp-content/uploads/2022/09/cropped-site-icon-tamilyugam-news-32x32.png ஆன்மிகம் – Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் – Tamilyugam https://tamilyugam.in 32 32 பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தம், தங்கரத கட்டணங்களை உயர்த்த முடிவு..!! https://tamilyugam.in/%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a/ https://tamilyugam.in/%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a/#respond Mon, 15 Jun 2026 11:44:24 +0000 https://tamilyugam.in/?p=238827 பழனி முருகன் கோவிலில் மூலப்பொருட்கள் மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக, பஞ்சாமிர்தம் மற்றும் தங்கரத புறப்பாட்டு கட்டணங்களை உயர்த்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்படி, அரை கிலோ பஞ்சாமிர்தம் ரூ.60-ஆகவும் (பழைய விலை ரூ.45), தங்கரத கட்டணம் ரூ.2,500-ஆகவும் (பழைய விலை ரூ.2,000) உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வுகள் குறித்த தங்களின் கருத்துகளை பக்தர்கள் வரும் ஜூலை மாதத்திற்குள் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

]]>
https://tamilyugam.in/%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a/feed/ 0
கேட்டதை கொடுக்கும்.. பணக்கஷ்டத்தை நீக்கும்.. வெற்றிலை தீப வழிபாடு..!! https://tamilyugam.in/%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%88-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d/ https://tamilyugam.in/%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%88-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d/#respond Fri, 12 Jun 2026 05:10:22 +0000 https://tamilyugam.in/?p=238736  

பணக்கஷ்டத்தை எளிமையாக தீர்க்க இதை விட சுலபமான வழிபாட்டை எங்கு தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது.

மகாலட்சுமியை நினைத்து இந்த தீபத்தை வீட்டில் ஏற்றினால், கஷ்டங்கள் அனைத்தும் காணாமல் போய்விடும்.

குறிப்பாக கடன் பிரச்சனை, பண பிரச்சனை இவைகளில் இருந்து விடுபட, இந்த லட்சுமி தீப வழிபாட்டை செய்யலாம்.

நகைகளை அடமானத்தில் வைத்திருந்தால் அந்த நகைகளை மீட்டெடுக்கவும் இந்த வழிபாடு கை கொடுக்கும்.

அடமானத்தில் இருக்கும் சொத்துக்களை மீட்டு எடுக்கவும் இந்த தீப வழிபாடு உங்களுக்கு கை மேல் பலனை கொடுக்கும்.

இந்த தீபத்தை ஏற்றினால் தீராத பண கஷ்டம் கூட, இந்த விளக்கு எரிந்து முடிவதற்குள் தீர்ந்துவிடும்.

எளிமையான முறையில் வீட்டில் லட்சுமி தீபம் ஏற்றுவது எப்படி. ஆன்மீகம் செல்லும் வழிபாடு இதோ உங்களுக்காக.

இந்த வழிபாட்டை மேற்கொள்ள நமக்கு ஒரு வெற்றிலை தேவை.

வெற்றிலைக்கு மேலே வைத்து ஏற்றுவதற்கு சின்ன மண் அகல் தீபம் தேவை.

அதில் பசு நெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏற்ற வேண்டும்.

அந்த திரி மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும்.

கொஞ்சமாக மஞ்சள் தூளில் தண்ணீர் அல்லது பன்னீர் ஊற்றி இந்த திரியை போட்டு பிசைந்து நிழலிலேயே காய வைத்தால் மஞ்சள் திரி தயார்.

மாலை 6:00 மணிக்கு இந்த விளக்கை வீட்டில் ஏற்ற வேண்டும்.

நிலை வாசலுக்கு உள்பக்கத்தில் மகாலட்சுமியை நினைத்து ஒரு தட்டின் மேல் வெற்றிலை வைத்து, அந்த வெற்றிலைக்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து, அதன் மேலே அகல் விளக்கு வைத்து, நெய் ஊற்றி, இந்த மஞ்சள் திரி போட்டு விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள்.

அந்த வெற்றிலையின் மேல் மகாலட்சுமிக்கு நிவேதியமாக இரண்டு டைமண்ட் கற்கண்டுகளை வைத்து
தீபம் ஏற்றி மனமுருகி மகாலட்சுமியை வீட்டிற்குள் வரவேற்க வேண்டும்.

நன்றாக நினைவு வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த விளக்கை நிலை வாசலுக்கு வெளிப்பக்கத்தில் ஏற்றக்கூடாது.

நிலைவாசலுக்கு உள்பக்கத்தில் கிழக்கு பார்த்தவாறு விளக்கை ஏற்றி வைக்கலாம்.

இந்த விளக்கின் முன்பாகவே அமர்ந்து மகாலட்சுமியை
மனம் உருகி வீட்டிற்குள் அழையுங்கள்.

‘ஓம் மகாலட்சுமி தாயே வருக வருக!’ என்ற மந்திரத்தை 27 முறை சொல்லி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

அந்த இரண்டு கற்கண்டுகளை எடுத்து நிலை வாசலுக்கு வெளியில் இரண்டு பக்கத்திலும் ஒவ்வொரு கற்கண்டு போட்டு விடுங்கள்.

அதை எறும்புகள் வந்து சாப்பிட்டால் குடும்பத்திற்கு ரொம்ப ரொம்ப நல்லது.

மேல் சொன்ன வழிபாட்டை செய்து வீட்டில் இருக்கும் பெண்கள் தினமும் மகாலட்சுமியை வீட்டிற்குள் அழைக்கலாம்.

மகாலட்சுமி விரும்பி உங்கள் வீட்டிற்குள் வந்து உங்கள் பண கஷ்டம் எல்லாவற்றையும் தீர்த்து விடுவாள்.

இந்த வெற்றிலை தீபத்திற்கு அவ்வளவு பெரிய மகத்துவம் உண்டு.

தினமும் இந்த விளக்கை
ஏற்ற முடியாதவர்கள் க
வெள்ளிக்கிழமை ஒரு நாள்
மட்டுமாவது இந்த வெற்றிலை தீபத்தை வீட்டில் ஏற்றினால், மகாலட்சுமி நிச்சயம் மனம் மகிழ்ந்து வரங்களை
கொடுத்து விடுவாள்.

தினமும் பழைய வெற்றிலையை தூக்கி
போட்டு விட வேண்டும்.

புது வெற்றிலையில் தான் விளக்கு ஏற்ற வேண்டும்.

அதே மண் அகல் விளக்குகளை துடைத்து தினமும் தீபம் ஏற்றலாம்.

பணக்கஷ்டம் உள்ளவர்கள் யோசிக்கவே யோசிக்காதீங்க.

தொடர்ந்து 48 நாட்கள் இந்த தீபத்தை ஏற்றுங்கள்.

உங்கள் பிரச்சனைகளுக்கு எல்லாம் சீக்கிரத்தில் விடிவு காலம் பிறக்கும்.

 

]]>
https://tamilyugam.in/%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%88-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d/feed/ 0
குங்குமத்தில் ஆரத்தி ஏன் எடுக்கிறார்கள் தெரியுமா..?? https://tamilyugam.in/%e0%ae%95%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d/ https://tamilyugam.in/%e0%ae%95%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d/#respond Fri, 12 Jun 2026 04:56:34 +0000 https://tamilyugam.in/?p=238720 குங்குமத்தில் ஆரத்தி ஏன்?

எந்த விதமான பிரச்சினைகளையும் கஷ்டங்களையும் போக்கும் எளிய பரிகாரங்கள் சடங்குகளாகவும் சம்பிரதாயங்களாகவும் சொல்லப்பட்டிருக்கின்றன.

பொதுவாக, புதுமணத் தம்பதியை ஆரத்தி எடுத்து வரவேற்பார்கள். அதேபோல, நல்லநாள் பெரியநாள் என முக்கிய தருணங்களில் ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் அழைப்பார்கள். குங்குமம் கலந்த நீரைக் கொண்டு, அதில் வெற்றிலை வைத்து அதன் மேலே சூடமேற்றி ஆரத்தி எடுப்பது இன்றைக்கும் கிராமங்களில் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

ஆரத்தி எடுக்கும்போது பயன்படுத்தப்படும் குங்குமம் கலந்த நீர், வெற்றிலையின் மீது எரிகின்ற கற்பூரம் ஆகியவற்றுக்கு தீய சக்திகளை விரட்டும் சக்தி உண்டு என்கிறார்கள் சாஸ்திர வல்லுநர்கள். மேலும், மங்கலகரமான காரியங்கள் அனைத்துக்குமே குங்குமமும் வெற்றிலையும் பிரதானமாகப் பயன்படுத்தப்படுகிறது.

வீட்டு வாசலில் இப்படி திருஷ்டி கழிக்கும்போது, துர்தேவதைகள் வாசலுடன் திரும்பிச் சென்றுவிடும் என்றும் அவர்களைத் துஷ்ட சக்திகள் இனி தொடராது என்பதும் இப்படி ஆரத்தியெடுத்து வாசலில் குங்குமம் கலந்த நீரையும் எரிகின்ற சூடத்தையும் வைப்பதால், கண் திருஷ்டி கழியும்; உடலின் அசதி கைகால் குடைச்சல் முதலானவை நீங்கும் என்பது ஐதீகம்.

வீட்டு விசேஷங்களின் போது, வாழைமரத்தை வாசலில் கட்டுவார்கள்.

இந்தக் குடும்பம் வாழையடிவாழையென செழிக்கவேண்டும் என்பதற்காக வாழைமரத்தைக் கட்டுவார்கள் என்றாலும் வாழைக்கு தோஷங்களையும் திருஷ்டியையும் போக்கும் வல்லமை உண்டு என்கிறார்கள் சிவாச்சார்யர்கள்.

திருச்சிக்கு அருகே உள்ள திருப்பைஞ்ஞீலி திருத்தலத்தில் வாழைமரத்துக்குத் தாலி கட்டும் சடங்கு அனுஷ்டிக்கப்படுகிறது.

வாழைக்குத் தாலி கட்டினால், தோஷம் நீங்கும்; திருமணம் விரைவில் நடந்தேறும் என்கிறார்கள் ஜோதிடர்கள்.

அமாவாசை, பெளர்ணமி, அஷ்டமி, நவமி, செவ்வாய், வெள்ளி முதலான நாட்களில் காலையும் மாலையும் வீட்டிலும் தொழில் செய்யும் இடத்திலும் சாம்பிராணியுடன் கருவேலம்பட்டைத் தூள், வெண் கடுகுத்தூள் ஆகியவற்றைக் கலந்து தூபம் காட்ட, திருஷ்டி நீங்கும்; தீய சக்தி விலகும் என்பது ஐதீகம்.

‘ஒரு கண்ணு போல ஒரு கண்ணு இருக்காது’ என்று திருஷ்டியைச் சொல்லுவார்கள்.

அதனால்தான் குழந்தைகளுக்கு நெற்றியிலும் கன்னத்திலும் மையையே பொட்டாக வைக்கும் வழக்கமும் இருக்கிறது.

கிராமங்களில், இன்றைக்கும் இவையெல்லாம் நடைமுறையில் இருக்கின்றன.

நகர வாழ்க்கையில் சடங்கு சாங்கியங்களைப் பின்பற்றுவதை கொஞ்சம்கொஞ்சமாக நாம் விட்டுவிட்டோம்; அவற்றை ஒருபோதும் விடக்கூடாது என வலியுறுத்துகின்றனர் ஆச்சார்யர்கள்.

]]>
https://tamilyugam.in/%e0%ae%95%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d/feed/ 0
அர்ச்சனை என்ற சொல்லின் பொருள் தெரியுமா..?? https://tamilyugam.in/%e0%ae%85%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa/ https://tamilyugam.in/%e0%ae%85%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa/#respond Tue, 09 Jun 2026 07:53:55 +0000 https://tamilyugam.in/?p=238550 அர்ச்சனை என்ற சொல்லின் பொருள் தெரியுமா?

அர்ச்சனை என்ற சொல் அர்ச்சா என்ற சொல்லில் இருந்து வந்ததாகும். அர்ச்சா என்றால் சிலை என பொருள். இந்த சொல்லில் இருந்தே அர்ச்சனை, அர்ச்சித்தல், அர்ச்சித்தர் என்ற சொற்கள் வந்தன. அர்ச்சித்தர் என்றாலும் சிலை என்றே பொருள்படும். ஆண்டவனுக்கு செய்யப்படும் ஆறுவகை உபசாரங்களுள் அர்ச்சனையே முக்கியத்துவம் பெறுகிறது.

ஆறுவகை உபசாரங்கள்

இறைவனுக்கு ஆறுவகையான உபசாரங்கள் செய்யப்படுகின்றன.

1. அபிஷேகம்: தண்ணீர், பால், தேன், தயிர், பன்னீர், இளநீர் மற்றும் பல பொருட்களால் செய்யப்படுவது.

2. அலங்காரம்: பட்டு பீதாம்பரத்தாலும், பொன்னாலும், மலர் மாலைகளாலும், தங்க நகைகளாலும், வைர வைடூரியங்களாலும் அழகுபடுத்துவதாகும்.

3. அர்ச்சனை: பூக்களாலும், பாக்களாலும் செய்யப்படுவது.

4. நைவேத்தியம்: பல்வேறு உணவு வகைகள், பால், பழம் முதலியவற்றை படைப்பது.
5. ஆராதனை: தூபம் காட்டுதல், தீபம் காட்டுதல்.

6. உற்சவம்: பெரு விழா நடத்தி மூர்த்தியை வலமாக வீதிகளில் கொண்டு செல்லுதல்.

]]>
https://tamilyugam.in/%e0%ae%85%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa/feed/ 0
கண் திருஷ்டியைக் கழிக்க எளிய பரிகாரங்கள் – மீன் தொட்டி, முகம் பார்க்கும் கண்ணாடி, ஆகாசக் கிழங்கு..!! https://tamilyugam.in/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b7%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/ https://tamilyugam.in/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b7%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/#respond Tue, 09 Jun 2026 07:47:40 +0000 https://tamilyugam.in/?p=238541 கண் திருஷ்டியைக் கழிக்க எளிய பரிகாரங்கள் – மீன் தொட்டி, முகம் பார்க்கும் கண்ணாடி, ஆகாசக் கிழங்கு

நம் வாழ்வில் உள்ள பல தடைகளுக்கு கண் திருஷ்டியே மிக முக்கியக் காரணமாக அமைவதாகச் சொல்கிறார்கள் ஜோதிடர்கள். பொன்னும் பொருளும் சேர்த்திருப்பார்கள். ஆனால் வீடு வாசல் வாங்கமுடியாது. நல்ல கைநிறைய சம்பளம் இருக்கும். ஆனால் எதற்கு எடுத்தாலும் மருத்துவமனை, வியாதி, செலவு என்று சின்னச் சின்னதாக பிரச்சினைகள் ஏற்படும்.வீட்டில், காய்கறிகள் முதல் கனிகள் வரை எல்லாமே இருக்கும். ஆனால் சாப்பிடப் பிடிக்காது.

இப்படி ஏதேனும் ஒன்று தடைக்கல்லாக இருந்து இம்சை செய்துகொண்டே இருக்கும். இவற்றுக்கெல்லாம் மிக எளிமையான பரிகாரங்கள் இருக்கின்றன. இவற்றைச் செய்து வந்தாலே திருஷ்டியெல்லாம் போய்விடும். அவற்றின் வீரியம் பலமிழந்துவிடும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

வாழை மரம் வளர்ப்பது, அதன் இலையோ பூவோ தண்டோ பயன்படும் என்பதற்காக மட்டும் வைப்பதில்லை. வாழை மரத்துக்கு திருஷ்டியையும் தோஷத்தையும் போக்கும் குணம் உண்டு. அதனால்தான் திருமணம் முதலான சுபகாரியங்களின் போது வாசலில் எல்லோருக்கும் தெரியும்படி வாழைமரத்தைக் கட்டுகிறார்கள்.

அதேபோல, ஆரத்தி எடுப்பதும் திருஷ்டி சுற்றிப் போடுவதன் இன்னொரு வெளிப்பாடு. ஒரு தட்டில் குங்குமம் கரைத்து, வெற்றிலையை வைத்து அதன் மேலே சூடம் ஏற்றி சுற்றிப் போடுவார்கள். திருஷ்டியெல்லாம் போய்விடும். காரியங்கள் தடையின்றி நடைபெறும்.

துர்குணம் கொண்ட கெட்டவர்கள், வயிற்றெரிச்சல் ஆசாமிகள், குரூர புத்தி கொண்டவர்களின் வீரியம் நம்மையும் நம் வீட்டையும் தாக்காமல் இருக்க, வீட்டு வாசலில் உள்ளே நுழைந்ததும் அவர்களின் முகம் தெரியும்படியாக, முகக்கண்ணாடியை மாட்டி வைக்கலாம். அதேபோல், வாசலில் கற்றாழை, சப்பாத்திக்கள்ளி மற்றும் முள் அதிகம் உள்ள செடி, மஞ்சள் ரோஜா என ஏதேனும் வைக்கலாம். இதனாலும் எதிராளிகளின் வீரியம் பலமிழக்கும். நம்முடைய பலம் பெருகும் என்பது நம்பிக்கை. வாசலில் கண் திருஷ்டி கணபதி படத்தை வைக்கலாம்.

மீன் தொட்டி வைக்கலாம். கருப்பு மற்றும் சிகப்பு நிறங்களில் உள்ள மீன்களை வளர்க்கலாம். இதனால் திருஷ்டி கழியும். மேலும் மீன் வளர்ப்பும் மீன்களின் துள்ளலும் ஓட்டமும் நம் மனதை அமைதிப்படுத்தும். கோபத்தைக் கட்டுப்படுத்தும்.

ஆகாச கருடன் எனும் கிழங்கு வகை உண்டு. இதனை வாங்கி, மஞ்சள், சந்தனம், குங்குமம் வைத்து கருப்புக் கம்பளிக் கயிற்றில் கட்டி, வீட்டு வாசலில் தொங்கவிடலாம். இதனால் எந்தப் பிரச்சினைகளும் அண்டாது என்கிறார்கள்.

கல் உப்புக்கு நிகரான திருஷ்டி கழிதல் எதுவும் இல்லை என்பார்கள். வாரத்துக்கு ஒருநாளேனும் கல் உப்பு கொஞ்சம் எடுத்து, குளிக்கும் நீரில் கலந்து, நீராடினால், உடல் அசதி, சோம்பல் தன்மை, உடல் அயர்ச்சி, மனக்குழப்பம் முதலானவை நீங்கும். நீங்கள் பிறந்த கிழமையிலோ அல்லது செவ்வாய்க்கிழமையிலோ குளித்து வருவது ரொம்பவே சிறப்பானது.

வளர்பிறை காலத்தில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில், கடற்கரைச் சென்று கடல் நீரை எடுத்துவந்து அதில் மஞ்சள் பொடியைக் கலந்து, கடையில், அலுவலகத்தில் வீடு முழுவதும் என தெளிக்கவேண்டும். இதனால் திருஷ்டி கழியும், வியாபாரம் பெருகும். லாபம் அதிகரிக்கும், வீட்டில் கடன் தொல்லையில் இருந்து மீளலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

]]>
https://tamilyugam.in/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b7%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/feed/ 0
கண்டிப்பாக இந்தக் கதையை அனைவரும் படிக்க வேண்டு கிறேன்..!! காலத்தை வென்ற கதை இது..!! https://tamilyugam.in/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%88/ https://tamilyugam.in/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%88/#respond Tue, 09 Jun 2026 07:41:54 +0000 https://tamilyugam.in/?p=238532  

நிம்மாண்டு நாயக்கர் வயசாளி. பேரக்காள் அவர் மனைவி. அந்த இருவரின் முடிவு காலத்தைப் பற்றிய கதை இது.
கடைசி வரியில் கதையை உணர்வின் உச்ச அலைகளுக்கு கொண்டு சென்றிருக்கிறார், கி.ராஜநாராயணன். அதற்காக உடனே கடைசி வரிக்குப் போய்விடாதீர்கள். அப்படி போனாலும் இந்தக் கதையை முழுதும் முன்பிருந்து படிக்காமல் போனால் அந்த பாதிப்புக்கு சென்று விட முடியாது.

அதுதான் இந்தக் கதையின் சிறப்பு…

 

நிம்மாண்டு நாயக்கர் பெரிய சம்சாரி. எம்பது ஏக்கர் கருசக்காடு.
நாலு சோடி உழவு மாடு. தொழு நிறைய கால்நடைச் செல்வங்கள். நிறைஞ்ச வெள்ளாமை.

குடியிருக்கும் வீடு பூர்வீக வீடு. அது போக மூணு கார வீடுகள்.

நிம்மாண்டு நாயக்கருக்கும், பேரக்காளுக்கும் மொத்தம் 8 பிள்ளைகள். 4 ஆம்பளப் பிள்ளைகள். 4 பொம்பளப் பிள்ளைகள். பொம்பளப் பிள்ளைகளை நல்ல இடத்துல கட்டிக் கொடுத்திருக்கு

ஆம்பிளப் பிள்ளைகள் நாலு பேருக்கும் நல்ல இடத்திலே பெண் எடுத்திருக்கு.

நிம்மாண்டு நாயக்கருக்கும் பேரக்காளுக்கும் பிள்ளைகள் மேல் கொள்ளைப் பிரியம்.

பேரக்காள் வாக்கப்பட்டு வரும் போது 100 பவுன் நகையோடு வந்தாள். அந்தக் காலத்திலே நூறு பவுன்னா சும்மாவா?

பொம்பளப் பிள்ளைகளுக்குப் போட்டது போக மீதியைப் பேரப் பிள்ளைகளுக்கும் போட்டாச்சு.

நாளடைவில் சொத்தைப் பிரிக்கணும், சொத்தைப் பிரிக்கணும் என்று சிறிசுகளுக்குத் தோன்ற ஆரம்பித்தது.

ஆனால், சொத்தைப் பிரிச்சுக் கொடுங்க என்று நேரடியாக அப்பாவைக் கேட்க பையன்களுக்குப் பயம்.

எப்படியோ இந்த விஷயம் பெரியவரின் காதுகளுக்கு எட்டியது.

ஒரு நாள் பருத்திக் காட்டுக்குப் போய்விட்டுத் திரும்பும் போது அலுப்புத் தாங்க முடியாமல் நிம்மாண்டு நாயக்கரும் பேரக்காளும் ஒரு மரத்தடியில் உட்கார்ந்தார் கள்.

பேரக்காளைப் பார்த்து, பேரக்காள், என்னடி சொல்றே? பையன்கள் சொத்தைப் பிரிக்கணும்னு ஆசைப்படுறாங்களாம்.நீ ஏதும் கேள்விப் பட்டாயா.” என்றார் நிம்மாண்டு.

” இதிலே என்ன இருக்கு? எப்ப இருந்தாலும் அவங்ககிட்ட ஒப்படைக்க வேண்டிய பாரம்தானே, பிரிச்சுக் கொடுத்திட வேண்டியது தானே? நமக்கும் வயசாகிப் போச்சு. கிட்ணா, ராமான்னு உட்கார்ந்து சாப்பிட வேண்டிய காலத்திலே ஏன் இப்படி லோலோன்னு அலைஞ்சு திரியணும்” என்றாள் பேரக்காள்.

பேரக்காள் சொன்ன பிறகு அப்பீல் ஏது?

மறு நாள் பையன்கள் நாலு பேரையும் வரச் சொன்னார் நிம்மாண்டு நாயக்கர்.

பாகப் பிரிவினை பற்றி அவர்களிடம் பேசினார். அவர்களும் சரி என்று தலையாட்டினார்கள்.

“சரி அப்ப நீங்க மத்தியஸ்தர் ஒருவரைக் கூட்டி வாருங்கள்” என்றார் பெரியவர்.

“நீங்க பார்த்து எப்படிச் செய்தாலும் சரிதாம்பா” “நீங்க என்ன ஒரு கண்ணில் வெண்ணெயும், ஒரு கண்ணில் சுண்ணாம்புமா வைக்கப் போறீங்க” என்றார்கள் பையன்கள்.

” அப்படி இல்லேடா கோட்டிப் பயபுள்ளைகளா! பாகம் பிரிக்கிறதுண்ணா மத்தியஸ்தர் ஒருத்தர் கட்டாயம் வேணும்.
போயி யாரையாவது ஒருத்தரைக் கூட்டிக்கிட்டு வாங்க” என்றார் பெரியவர்.

பையன்கள் நால்வரும் பாறைப்பட்டி கந்தச்சாமி நாயக்கரைக் கூட்டி வந்தார்கள். பாறைப்பட்டி நாயக்கர் எல்லோருக்கும் பொதுவானவர்.

ஊர்ப் பெரிய மனுசன். தெற்கு வடக்கு போய் வரும் மனுசன்.

விபரம் தெரிந்தவர்.

பாறைப்பட்டி நாயக்கர் வந்தார்.

” வாங்க பாறைப்பட்டை மாப்ள!” என்று சிரித்தபடி நிம்மாண்டு நாயக்கர் வரவேற்றார்.

பாறைப்பட்டி நாயக்கர் தொழுவத் திலேயே உட்கார்ந்து கொண்டார்.

வீட்டுக்குள் உட்கார்ந்தா வெத்திலை எச்சி துப்ப எந்திரிச்சு வெளியே வரணும்.

தொழுவம்தான் சரி.

பேரக்கா காப்பித் தண்ணி கொண்டு வந்தாள்.
காப்பி குடித்த பின்பு பாறைப்பட்டி நாயக்கர் வெற்றிலை போட்டார். நிம்மாண்டு மெல்லப் பையன்களின் ஆசைகளைச் சொன்னார்.

“என்னைக்கி இருந்தாலும் அதைச் செஞ்சிட வேண்டியது தானே” என்று ஒத்துக் கொண்டார் பாறைப் பட்டி நாயக்கர்.

வீட்டிலிருந்த பருத்தி, வத்தல்,மல்லி, தானியங்கள் உட்பட மொத்த சொத்தும் நான்கு பாகங்களாகப் பிரிக்கப் பட்டன.

எல்லாம் வாய்க்கணக்காகவே.
சரி தானே என்று கேட்டார் பாறைப் பட்டி.

பையன்கள் தங்கள் மனைவிமார்களிடம் சென்று கலந்து பேசினார்கள்.

பின்பு வந்து சரி என்றார்கள்.

நான்கு பாகங்களாகப் பிரிக்கப் பட்ட சொத்துக்கள் துண்டுச் சீட்டுக்களில் எழுதப் பட்டன.

அவற்றைப் பாறைப் பட்டி நாயக்கர் சுருட்டிக் குலுக்கிப் போட்டார்.

இளையவன் முதலில் ஒரு சீட்டை எடுத்தான்.
பிறகு ஒவ்வொருத்தராக வந்து சீட்டு எடுத்தார்கள். சீட்டில் எழுதப் பட்டுள்ல சொத்துக்கள் எடுத்தவர்க்கு.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வீடு என்று பிரிக்கப் பட்டது. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு வசதியும் இருந்தது. வசதிக் குறைவும் இருந்தது.

மருமகள்கள் கண்களுக்கு வசதிக் குறைவுகளே பெரிதாகப் பட்டது.

பூர்வீக வீடு அண்ணனுக்கு கிடைத்தது.

அண்ணன் யோகக்காரன் என்று தம்பிகளுக்குப் பட்டது.
வயித்தெரிச்சல் தொடங்கி விட்டது.

பாகப் பிரிவினை ஒருவழியாக முடிந்தது என்று பாறைப்பட்டி நாயக்கர் நினைத்துக் கொண்டார்.

இந்த நேரத்தில் நிம்மாண்டு நாயக்கர் விறுவிறு என்று பூர்வீக வீட்டுக்குள் போனார்.
வெங்கலத் தவலை ஒன்றைத் தூக்க முடியாமல் தூக்கி வ்ந்தார்.

பாறைப்பட்டி நாயக்கருக்கு முன்னால் தவலையைக் கவுத்துத் தட்டினார்.

நாணயங்கள் விழுந்தன.

எல்லாம் வெள்ளிக் காசுகள்.
வெள்ளைக் காரன் காலத்து வெள்ளிக் காசுகள்.
அந்தக் காலத்தில் 12 வெள்ளிக் காசுகளுக்கு ஒரு பவுன் தங்கம் வாங்கலாம்.

மொத்த‌ம் 2000 காசுகள் இருந்தன.

காசுகளையும் சரிசமமாகப் பகிர்ந்தார்கள்.

காசுகளை மகன்களுக்குப் பகிர்ந்து கொடுக்கும் போது நிம்மாண்டு நாயக்கரின் முகத்தைப் பார்க்கணுமே !!!

மனுசன் முகத்திலே ஒரே சந்தோசம்.

“நம்ம அப்பா மாதிரி இந்த ஊரிலே யாரு பிள்ளை களுக்கு இப்படி பகிர்ந்து கொடுத்திருக்காங்க” என்று பிள்ளைகள் பெருமையாக நினைத்துக் கொண்டார்கள்.

“பொல்லாத கிழவரு! இது மாதிரி இன்னும் எம்புட்டுப் பணத்தை எங்கெங்கே புதைச்சி வச்சிருக்காரோ? என்று எல்லோரும் நினைத்தார்கள்.

பாறைப்பட்டி கவலைப்பட்டார்.

“இப்போ இந்தக் கிழவர் பண்ணியது வம்பான வேலை.
பையன்களுக்கு ஏற்கெனவே போதுமான அளவு கொடுத்திருக்கு

வத்தல், பருத்தி, உளுந்து, மல்லி முதல் கொண்டு அவ்வளவும் கொடுத்தாச்சு.

இப்பப் போயி இவரு ஏன் பணத்தையும் பகிர்ந்து கொடுக்கணும்.

நோக்காடு, சாவுன்னா பிரயோசனப்படுமே” என்று பாறைப்பட்டி நினைத்துக் கொண்டார்.

நிம்மாண்டு, பாறைப்பட்டியைப் பார்த்து சொன்னார், “இத்தனை நாள் பிள்ளைகள் என் கையை எதிர்பார்த்து இருந்தாங்க .

இனி நான் அவங்க கையை எதிர்பார்த்து இருக்கணும்” என்று சொன்னார்.

பிறகு பிள்ளைகளைப் பார்த்துச் சொன்னார். “பாருங்கப்பா! இருக்கிறது எல்லாத்தையும் உங்களுக்குக் கொடுத்தாச்சு.”

“அம்மா போட்டிருக்கிர கம்மல், நான் போட்டிருக்கிற வெள்ளி அரணாயிக்கயிறு மடும் தான் மிச்சம்.”

“இனி எங்களுக் கென்ன? மூணு வேளைக் கஞ்சி, கட்டிக்கிடத் துணி, தலைக்கு எண்ணெய்” என்று சிரித்துக் கொண்டே சொன்னார் நிம்மாண்டு நாயக்கர்.

நிம்மாண்டு நாயக்கரும் பேரக்காளும் ஒவ்வொரு மாதமும் ஒரு மகன் வீட்டில் இருப்பது என்று முடிவானது. முதல் தடவை எந்தப் பிரச்சனையும் இல்லை. நாலு வீட்டிலும் நல்ல கவனிப்பு.

நாளாக நாளாக நிலைமை மோசமானது.

மூன்று வேளைச் சாப்பாடு இரண்டு வேளை ஆனது.

இரண்டு வேளைக் காப்பி, ஒரு வேளை ஆனது.

பேரக்காள் பிரியமாய்ப் போடும் வெற்றிலையும் நிறுத்தப்பட்டது.

அடுத்தடுத்த மாதங்களில் தலைக்கு எண்ணெயும் போச்சு, உடுமாத்துத் துணிகுறைஞ்சாச்சு.

வயசாளிகள் இருவரும் மெலிந்து போனார்கள்.

உடம்பெல்லாம் வங்கு வத்திப் போச்சு.

இரண்டு பேரும் சாயம் போன கந்தல் துணி போல ஆயிப்போயிட்டாங்க.

எண்ணெய் தேய்க்காததால் தலை அட்டுப் பிடித்து பிசுபிசுவென்று ஆகிப்போனது.

தாங்க முடியாமல் பேரக்காள் ஊர்க்குளத்தில் போய்க் களிமண்ணைத் தலையில் தேய்த்துக் குளித்து வந்தாள்.

அன்று பார்த்து , தற்செயலாகச் சின்ன மகள் அப்பா அம்மாவைப் பார்த்துப் போக வந்தாள்.

வந்தவள் நிலைமையைப் புரிந்து கொண்டாள்.

கோபத்தோடும் ஆங்காரத்தோடும் அண்ணன்களையும் மதினிகளையும் திட்டித் தீர்த்தாள்.

நிம்மாண்டு நாயக்கரும் பேரக்காளும் குனிந்த தலை நிமிராமல் கண்ணீர் வடித்தார்கள்.

தன்னோடு வந்து விடும்படி மகள், அம்மா அப்பாவைக் கேட்டாள்.

கொஞ்ச நேரம் பெரியவர் பேசவில்லை.

பிறகு சொன்னார்.

“சம்மந்தக்காரங்க வீட்டுல போய் இருக்கிறது நல்லது இல்ல அம்மா! நீ நிம்மதியா ஊருக்குப் போம்மா !” என்றார்

அன்று இரவு வயசாளிகள் இரண்டு பேருக்கும் தூக்கம் வரலை.

ஆதரவு இல்லாத நிலையை நினைச்சு நினைச்சு கலங்கினாங்க.

பேரக்காள் நிம்மாண்டு நாயக்கரின் காதில் மெதுவாகக் கேட்டாள். ”

” எங்கேயாவது கண்காணாத இடத்துக்குப் போயிரு வோமா?”

அவருக்கும் அதுதான் சரி என்று பட்டது. சரி என்றார் நிம்மாண்டு.

இரண்டு நாள் கழித்து நடுவுள்ள மகள் வந்தாள்.

அப்பா, அம்மாவுக்குப் பிடிச்ச பலகாரம் பண்டமெல்லாம் கொண்டாந்து தந்தாள்.

அவர்கள் நிலைமையைக் கண்டு கண்ணீர் விட்டாள்.

போகும்போது அப்பா அம்மா கையில் கொஞ்சம் பணம் கொடுத்து,
“நினைக்கிறத வாங்கித் தின்னுங்க!” என்று சொல்லி விட்டுப் போனாள்.

ஊரைவிட்டுப் போக நினைச்சுக் கிட்டு இருந்த அவங்களுக்கு இந்தப் பணம் உதவியாக இருந்தது.

மகள் கொடுத்த பணத்தை வைத்துக் கொண்டு ஒரு நாள் அதிகாலை வயசாளிகள் இருவரும் கோவில்பட்டி புறப்பட்டுப் போனார்கள்.

தெரிந்தவர்கள் கண்ணில் படாமல் பயந்து பயந்து நடந்தார்கள்.

கம்மலையும், வெள்ளி அரணாக் கயித்தையும் விற்றார்கள்.

சாமியைக் கும்பிட்டு ரயிலேறி மதுரைக்குப் போனார்கள்.

மதுரை ரயில்வே ஸ்டேசனில் கணக்கு வழக்கில்லாத கூட்டம்.
என்ன செய்யிறது?

எங்க போறதுண்ணு தெரியாம இரண்டுபேரும் உட்கார்ந்து இருந்தாங்க.

அந்த கூட்டத்திலேயும் பேரக்கா கிட்ட ஒரு சின்ன குழந்தை வந்து ஒட்டிக்கிட்டது.

பேரக்க குழந்தையை அணைச்சிக்கிட்டாள்.

குழந்தையின் குடும்பம் இராமேஸ்வரம் போகுது.

எங்க போறதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருந்து இவங்களும் ராமேஸ்வரம் போயிடலாம்னு முடிவு பண்ணி புறப்பட்டுப் போனாங்க.

ரயில் பேரக்காளைக் குலுக்கிக் குலுக்கித் தாலாட்டியது. பேரக்காள் ரயிலில் தூங்கினாள்.

“எப்பேர்ப்பட்ட குடும்பத்தில் பிறந்த பொண்ணு! இப்படி ஆயிட்டதே”
ன்னு பேரக்காளைப் பார்த்து நிம்மாண்டு நினைத்தார்.

நினைக்கவும் அவருக்குக் கண் கலங்கியது.

இவர்கள் கண்காணாமல் போன சமாச்சாரம் முதலில் ஊருக்குத் தெரிந்து விட்டது.

பிறகுதான் பிள்ளைகளுக்குத் தெரிந்தது.

பிள்ளைகள் மனசு பதறுச்சு.

என்ன இருந்தாலும் பெற்ற தாய் தகப்பன் இல்லையா?

மருமக்க மார்கள் ‘எங்கனயாவது கிடக்கும்’னு எரிச்சலோடு சொன்னாங்க.

ஒரு நாள் ஒரு செய்தி காட்டுத்தீ போல் வந்தது,”

கிணத்துல ஒரு தாத்தாவும் பாட்டியும் பொணமா மல்லாக்க மெதக்குறாங்களாம்!”

எல்லோரும் ஓடிப்போய்ப் பார்த்தாங்க . ஆனா இவங்க இல்ல.

பிள்ளைகள் கொஞ்ச நாள் தாய் தகப்பனை ஓடி ஆடித் தேடினார்கள்.

ஒரு தகவலும் கிடைக்க வில்லை.

நிம்மாண்டு நாயக்கரும் பேரக்காளும் கண்காணாமல் போய் நாலைஞ்சு வ்ருசமாச்சு. ஊரு மறந்து போச்சு.

ஒரு நாள் நேத்திகடன் செலுத்த பாறைப்பட்டி நாயக்கர் ராமேஸ்வர்ம் போனார்.
சாமி கும்பிடுவதற்காக கோவிலுக்குப் போனார்.

கோவில் வாயிலில் இரண்டு பக்கத்திலும் பிச்சைக் காரங்க உட்கார்ந்திருந்தாங்க.

பாறைப்பட்டி நாய்க்கர் தற்செயலாகத் திரும்பிப்பார்த்தார்.

திகைச்சு நின்னுட்டார்.

எங்கேயோ பார்த்த முகமா இருக்கேன்னு கவனிச்சார்.
பதறிப் போனார்.

அந்தப் பிச்சைக் காரர்கள் வரிசையில் நிம்மாண்டு நாயக்கரும் பேரக்காளும் இருந்தாங்க

ரெண்டு பேர் தலையும் மொட்டை போட்டிருக்கு.
பாறைப்பட்டியால தாங்க முடியல.

தலையில தலையில அடிச்சுக்கிட்டார். . ‘கோன்னு’ அழுதார்.

வயசாளிகள் இருவரும் அழவில்லை.

கண்ணில் இருந்து ஒரு பொட்டுக் கண்ணீர் வரலை.

நிம்மாண்டு நாயக்கர் பாறிப்பட்டி நாயக்கரை முன்னப் பின்ன தெரியாத ஆளைப் பார்ப்பது போல் பார்த்தார்.

பேர்க்காளுக்கு பாறைப்பட்டி நாயக்கரை அடையாளம் தெரிந்தது.

வாயைத் திறந்து ஒரே ஒரு வார்த்தை மட்டும் பேசினாள்,
“எம்பிள்ளைக எல்லாரும் நல்லா இருக்காகளா?”.

****************
கி.ராஜநாராயணனின் ஆகச்சிறந்த சிறுகதைகளில் ஒன்றான, “காய்ச்ச மரம்”.

🙏😓🙏😓🙏😓🙏😓🙏😓🙏
சொந்தங்களே உறவுகளே நம் தாய் தந்தையை விட சிறந்த ஒரு உறவு இந்த உலகில் வேறு எதுவும் இல்லை. நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் முதல் ஜீவன்களும் அவர்களே.

வயதான காலத்தில் எந்த ஒரு தாய் தந்தையும் இந்தத் நிலைக்கு ஆளாகக் கூடாது. குழந்தையாக பிறந்த நமக்கும் ஒரு நாள் வயதாகும் இந்த உலகம் யாருக்கும் நிலையில்லை என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். பெரும்பாலும் பிள்ளைகள் செய்யும் தவறினால் தான் பெற்றவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

பெரும்பான்மையான பெற்றோர் செய்யும் தவறு தங்களுக்கென்று எதுவும் வைத்துக் கொள்ளாமல் அனைத்தையும் பிள்ளைகளுக்கு தாரை வார்த்துக் கொடுப்பது தான். ஆரம்பத்தில் இனிக்கும் உறவு இறுதியில் பணம் இல்லையேல் கசந்து போகத்தான் செய்யும். இதுதான் மனித மனத்தின் பேரவலம். இறுதிக்காலத்தில் உங்களிடம் பணம் இருந்தால் உங்களுக்கென்று சிறிதாவது வைத்துக் கொண்டு வாழுங்கள். அது உங்களது இறுதிக்காலம் வரை உங்கள் தன்மானத்தை காக்கும்.

பெற்ற மனத்தை பித்தாக விடாமல் இல்லை மனது கல்லாக இருக்காமல் பெற்றவர்களை என்றென்றும் நாம் இதய சுத்தி நன்றி உணர்வோடு போற்றி பாதுகாப்போம் வாழ்க வளமுடன் 🙏🙏
🙏இவ்வுலகில் உறவுகள் என்பதுபண உறவாகிவிட்டது பாச உறவு மழுங்கிப்போய்கொண்டிருக்கிறது

படித்ததில் பிடித்த கதை

 

]]>
https://tamilyugam.in/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%88/feed/ 0
பெண்கள் காலில் கருப்பு கயிறு அணிவது ஏன்..?? ஆன்மீக உண்மை இதுதான்..!! https://tamilyugam.in/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81/ https://tamilyugam.in/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81/#respond Tue, 09 Jun 2026 06:11:37 +0000 https://tamilyugam.in/?p=238506 பெண்கள் காலில் கட்டும கருப்பு கயிறுக்கு பின்னே இருக்கும் பயன்கள் மற்றும் ஆன்மீக காரணங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

இன்றைய காலத்தில் பெரும்பாலான பெண்கள் காலில் கருப்பு கயிறு கட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர். சிலர் இதனை புதிய ட்ரெண்டாக்கியும் வருகின்றனர்.

 

 

அதிலும் கருப்பு கயிரில், ஏதாவது சிறிய லாக்கெட்டுகளை சேர்த்து அணிந்து அதனை ஸ்டைலான அணிகலனாக மாற்றியுள்ளனர். ஆனால் காலில் கருப்பு கயிறு அணிவது முன்னோர்களால் பின்பற்றப்பட்டுவரும் பாரம்பரிய நடைமுறையாகும்.

பெண்கள் கருப்பு கயிறு கட்டுவது திருஷ்டியை தவிர்க்கும் என்று கூறப்படுகின்றது. ஆதலால் ஆண்கள் வலது காலிலும், பெண்கள் இடது காலிலும் கருப்பு கயிறை கட்டுகின்றனர். இதற்கான ஆன்மீக காரணத்தையும் தெரிந்து கொள்வோம்.

 

கருப்பு கயிறு கட்டுவது ஏன்?

காலில் கருப்பு நிற கயிறு கட்டுவதால் சனி தோஷம் நீங்குவதுடன், ராகு கேது பாதிப்பு வராது என்று கூறப்படுகின்றது. கண்திருஷ்டியை தவிர்ப்பதற்கும் கருப்பு நிற கயிற்றை காலில் கட்டுகின்றனர்.

ஜோதிடத்தின்படி ஒரு நபரின் பார்வைக்கு சக்தி அதிகமாகமாம். ஆதலால் மற்றவர்களின் கண்படாமல் இருப்பதற்கு குழந்தைகளுக்கு கருப்பு மை வைப்பது வழக்கமான நிலையில், காலில் கறுப்பு கயிறு கட்டுவது வழக்கமாக இருக்கின்றது.

மேலும் நேர்மறை சக்தியை அதிகரிப்பதுடன், சூரிய ஒளியிலிருந்து வரும் கதிர்களை உடலுக்கு உறிஞ்சும் தன்மை இதற்கு உள்ளதாகவும் கூறப்படுகுின்றது.

 

கணுக்கால் பகுதியில் கருப்பு கயிறு கட்டினால் நாடியின் இயக்கமும், மனச்செயல்பாடுகளும் சீராகும் என்பது நம்பிக்கையாகும்.

ஜோதிடத்தின் படி காலில் கருப்பு கயிறு கட்டுவது நிதி நிலையை பலப்படுத்தும் என்றும், சனி பகவானை வணங்கி ஒன்பது முடிச்சு போட்டு கருப்பு கயிறை அணிவது பண வரவு அதிகரிப்பதுடன், ஆபத்து வராமல் பாதுகாப்பதாகவும் நம்பிக்கை காணப்படுகின்றது.

பெண்கள் பிரம்ம முகூர்த்தத்தில் அல்லது நண்பகல் 12 மணி, சனி மற்றும் செவ்வாய் கிழமைகளில் கயிறு கட்டுவது சிறப்பாக கருதப்படுகின்றது.

]]>
https://tamilyugam.in/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81/feed/ 0
தேங்காய்க்குள் மறைந்திருக்கும் சகுனம்..!! தேங்காயின் முடிப்பாகம் சிறியதாக வட்டமாய் உடைந்தால் செல்வம் சேரும்..!! https://tamilyugam.in/%e0%ae%9a%e0%ae%95%e0%af%81%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/ https://tamilyugam.in/%e0%ae%9a%e0%ae%95%e0%af%81%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/#respond Sat, 06 Jun 2026 04:53:35 +0000 https://tamilyugam.in/?p=238302

(1) தேங்காய் சகுனம்.

(2) ஐந்தில் ஒரு பங்காக உடைந்தால் அழியாத செல்வம் உண்டாகும்

(3) சரிசமமாக உடைந்தால் துன்பம் தீரும், செல்வம் பெருகும்

(4) மூன்றில் ஒரு பங்காக உடைந்தால் இரத்தினம் சேரும்

(5) ஓடு தனியாக கழன்றால் துன்பம் வரும்

(6) உடைக்கும் பொழுது கைப்பிடியிலிருந்து தவறி கீழே விழுந்தால் குடும்பத்தில் துன்பம் & பொருள் இழப்பு ஏற்படும்

(7) நீளவாக்கில் உடைந்தால் தனம் அழிந்து துன்பம் உண்டாகும்

(8) முடிப்பாகம் இரு கூறானால் தீயினால் பொருள் சேதம்

(9) முடிப்பாகம் இரு கூறாக உடைந்து அந்த இரு கூறுகளோடு அவற்றின் ஓடு உடனே தெறித்து வீழ்ந்தால் நோய்களினால் துன்பம் ஏற்படும்

(10) சிறு, சிறு துண்டுகளாக உடைந்தால் செல்வம், செல்வாக்கு & ஆபரண லாபம் உண்டாகும்

(11) ஆலயத்தில் தெய்வத்திடம் வேண்டிக் கொண்டிருக்கும் பொழுது தேங்காய் உடைக்கும் சத்தம் கேட்டால் வேண்டும் காரியம் வெற்றியை தரும்.

]]>
https://tamilyugam.in/%e0%ae%9a%e0%ae%95%e0%af%81%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/feed/ 0
கோடீஸ்வர யோகத்தை கொட்டித் தரக்கூடிய வசம்பை உங்கள் தலையில் இப்படி வைத்து பாருங்கள்..!! https://tamilyugam.in/%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%80%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0-%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4/ https://tamilyugam.in/%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%80%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0-%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4/#respond Sat, 06 Jun 2026 04:48:19 +0000 https://tamilyugam.in/?p=238299  

உங்களின்_தலையெழுத்தே_மாறும்.
பொதுவாகவே வசம்புக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி இருக்கின்றது. இதற்கு காரணம், இந்த வசம்பில் எந்த ஒரு கெட்ட சக்தியும் அண்டாமல் இருப்பது தான். இந்த வசம்பை நம்முடைய முன்னேற்றத்திற்கு எப்படி பயன்படுத்தலாம் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.’பரிகாரம் செய்வதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை!’ என்று சொல்லுபவர்கள், இந்த வசம்பில் ஒரு சிறு துண்டை வாங்கி உங்கள் பர்ஸில் வைத்துக்கொண்டால் கூட, உங்கள் பர்ஸில் இருக்கும் பணத்திற்கு பிரச்சினை வராது. பர்ஸில் இருக்கும் பணம், செலவு ஆனாலும் திரும்பவும் வருமானம் சீக்கிரமே வரும்.
சரி. நீங்கள் பஸ்ஸில் வைப்பதற்கு வசம்பை வாங்கினாலும், பரிகாரம் செய்வதற்கு வசம்பை வாங்கினாலும் சரி. முதலில் பேரம் பேசாதீர்கள். பேரம் பேசாமல் கேட்கும் விலையை கொடுத்து விட்டு, வசம்பை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இதை உங்களுடைய பூஜை அறையில் தான் வைக்க வேண்டும். கட்டாயம் தீட்டு படக்கூடாது.
காலையில் நீங்கள் எழுந்து குளித்து முடித்துவிட்டு, ஒரு மண் அகல் விளக்கில், சிறிது பசு நெய் ஊற்றி, தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். ஏற்றி வைத்திருக்கும் தீபச்சுடரில், இந்த வசம்பை காட்டினாலே, லேசாக அந்த வசம்பு கருப்பு நிறமாக மாறும். அதன் பின்பு அந்த விளக்கில் இருக்கும் நெய்யை சிறிதளவு, உங்கள் கை மோதிர விரலில் தொட்டு, வசம்பின் இருக்கும் கரு நிறத்தை தொட்டால், கருப்பு விரலில் ஒட்டிக் கொள்ளும். லேசாக ஒட்டியிருக்கும் அந்த கருப்பு மையை உங்களது உச்சந்தலையில் லேசாக வைத்துக் கொள்ள வேண்டும். நெற்றியிலும் லேசாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்படி இந்த பரிகாரத்தை செய்து விட்டு, நீங்கள் எந்த ஒரு செயலுக்கு சென்றாலும், அதில் பல மடங்கு அதிகமான வெற்றி கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. தொழில் தொடங்குவதாக இருந்தாலும் சரி. கடனை வசூலிக்க சென்றாலும் சரி. எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் சரி சுலபமாக ஒரு தீர்வு கிடைக்கும். ஒரு நல்ல காரியத்திற்கு கிளம்பும் போது கூட, இப்படி இந்த மையை இட்டுக் கொண்டு கிளம்பும் பட்சத்தில், அந்த காரியம் சுபமாக முடிந்து விடும் என்பதில் சந்தேகமே இல்லை.பல பெரிய
பெரிய பணக்காரர்கள், தொழில் வசியம், தன வசியம், முக வசியம், ஜன வசியம் செய்வது இந்த வசம்பை வைத்துத்தான். வசதி படைத்தவர்கள் பெரிய பெரிய சாஸ்திரம் தெரிந்தவர்களை வைத்து, செய்யக்கூடிய பலர் வசிய வித்தைகள், மூலம் கிடைக்கப்படும் அதே சக்தி, இந்த வசம்பு மையை நெற்றியில் இட்டுக் கொண்டால் கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.தினம்தோறும்
இப்படி தொடர்ந்து செய்து வரும் பட்சத்தில் நீங்கள் எல்லோராலும் விரும்பத்தக்க மனிதராக மாறி விடுவீர்கள். யாருக்காவது உதவி என்று தேவைப்பட்டால் கூட, உங்களை வந்து அழைப்பார்கள். நீங்கள் உடன் சென்றால், அந்த காரியம் வெற்றி அடைகிறது என்ற நம்பிக்கையும் உண்டாகும் அளவிற்கு உங்களது வசீகரம் மாறும்.இப்படி
எல்லாம் சொன்னால் கண்டிப்பா நம்பமாட்டீர்கள். 48 நாட்கள் செய்து பாருங்கள்! அடுத்தவர்கள் உங்களிடம் பழகும் முறையும் மாறிவிடும். நீங்கள் அடுத்தவர்களிடம் பழகும் முறையும் மாறிவிடும். தொட்டதெல்லாம் வெற்றி அடைந்து, பணவரவு அதிகரித்துக் கொண்டே வந்தால் யாருக்குத்தான் அழகு கூடாது? இந்த வசம்பை இப்படி நெற்றியில் வைத்துக் கொள்வதன் மூலம் எந்த ஒரு பிரச்சனையும் வராது. குழந்தைகளுக்குக்கூட சிறுவயதில், மைக்கு பதிலாக, இந்த வசந்த குழைத்து நெற்றியில் வைப்பார்கள்.

]]>
https://tamilyugam.in/%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%80%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0-%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4/feed/ 0
துளசிபத்ரம் மகிமை..!! அருமையான சிறுகதை கண்டிப்பா படிங்க..!! https://tamilyugam.in/%e0%ae%a4%e0%af%81%e0%ae%b3%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%88/ https://tamilyugam.in/%e0%ae%a4%e0%af%81%e0%ae%b3%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%88/#respond Sat, 06 Jun 2026 03:18:34 +0000 https://tamilyugam.in/?p=238293 துளசிபத்ரம் மகிமை…

ஏழை ஒருவர் தினமும் அதிகாலையில் எழுந்து காட்டுக்குள் சென்று கீரை வகைகளை பறித்து அதை சந்தையில் விற்று அதில் வரும் பொருளை கொண்டு குடும்ப பொருளாதாரத்தை சமாளித்து கொண்டிருந்தார். அவர் தினமும் அதிகாலையில் எழுந்து காட்டுக்கு போகும் வழியில் ஒரு குடிசையில் முனிவர் ஒருவர் சிறு பெருமாள் விக்கிரகத்தை வைத்து துளசி இலையை வைத்து பூஜை செய்வதை பார்த்து கொண்டே போவார் ,

ஒரு நாள் அதேபோல் முனிவர் பெருமாளுக்கு துளசியை வைத்து பூஜை செய்வதை பார்த்துவிட்டு காட்டுக்குள் சென்றார் . கீரை வகைகளை பறிக்கும் போது அதன் அருகே துளசி இலையும் வளர்ந்திருப்பதை கண்டார் . அப்போது அவருக்கு முனிவர் பூஜை செய்யும் துளசி இலை ஞாபகம் வந்தது நாமும் அந்த முனிவரை போன்று ஒரு மனிதன் தானே இதுவரை என்றாவது பெருமாளுக்கு பூஜை செய்திருக்கிறோமா? நம்மால் பூஜை தான் செய்ய முடியவில்லை இந்த துளசியையாவது பறித்து கொண்டு முனிவர் செய்யும் பூஜைக்கு அர்ச்சனையாக கொடுப்போமே என்று துளசியையும் சேர்த்து பறித்து கீரை கட்டோடு போட்டு தலை மீது வைத்து முனிவரின் குடில் நோக்கி வந்தான் . ஆனால் அவன் பறித்து போட்ட கீரை கட்டில் ஒரு சிறு கரு-நாகம் இருந்ததை அவன் கவனிக்கவில்லை. முனிவரின் குடிலில் முனிவர் முன் வந்து நின்றான் ஏழை .

முனிவர் ஏழையை பார்த்தார் ,
அவன் பின்னே அருவுருவமாய் யாரோ ஒருவர் நிற்பதை கண்டார்..
பின் தன் ஞான-திருஷ்டியில் அவர் யார் என்று அறிய முயன்று கண்களை மூடினார் . ஏழையின் பின்னே நிழல் போல் கிரகங்களில் ஒருவரான ராகு-பகவான் நின்றிருந்தார் .

முனிவர் ஏழையிடம் “அப்பா உன் தலையில் உள்ள கீரை கட்டை அப்படியே வைத்திரு .ஒரு ஐந்து நிமிடம் அதை கீழே இறக்க வேண்டாம்.. இதோ வந்துவிடுகிறேன்” என்று கூறி குடிலின் பின் பக்கம் சென்று ஒரு மந்திரத்தை உச்சரித்து ஏழையின் பின்னே நின்றிருந்த ராகு -பகவானை அழைத்தார் .

ராகு-பகவானும் முனிவர் முன்னே வந்து நின்று வணங்கி “ஸ்வாமி என்னை தாங்கள் அழைத்த காரணம் என்ன” என்று கேட்டான் —

முனிவரும் ராகு-பகவானை வணங்கி “ராகவனே எதற்காக இந்த ஏழையை பின் தொடர்ந்து வருகிறாய்..?என்ன காரணம் என்று நான் அறியலாமா ?”.

ராகு பகவான் “ஸ்வாமி இந்த ஏழையை இன்று நான் ஒரு சிறு கரு -நாகம் உருவம் எடுத்து இவனை தீண்ட வேண்டும் என்பது இவனுக்கு எழுதப்பட்ட கிரக விதி .
ஆனால் இவன் என்றும் இல்லாத அதிசயமாக இன்று திருமால் விரும்பும் துளசியை இவன் சுமந்ததால் இவனை என்னால் தீண்ட முடியாமல் தவித்து கொண்டிருக்கிறேன் . இவன் தலையில் சுமந்திருக்கும்
துளசியை உங்களிடம் கொடுத்த அடுத்த கணமே அவனை தீண்டி விட்டு என் கடமையை முடித்து கொண்டு நான் கிளம்பி சென்று விடுவேன்” என்றார் .

துறவிக்கு ஏழை மேல் பரிதாபம் ஏற்பட்டது… எவ்வளவு ஆசையாக நம் பூஜைக்காக துளசியை பறித்து கொண்டு வந்துள்ளான் அவனை காப்பற்ற முயற்சிக்க வேண்டும் என்றெண்ணி , “ராகு பகவானே அவனை நீ தீண்டாமல் இருக்க ஏதேனும் பரிகாரம் உள்ளதா ?”

ராகுபகவான் “ஸ்வாமி இத்தனை காலம் நீங்கள் பெருமாளுக்கு பூஜை செய்த புண்ணியத்தின் பலனை அந்த ஏழைக்கு தாரை வார்த்து கொடுத்தால் அவனது தோஷம் நீங்க பெற்று நான் அவனை தீண்டாமல் சென்று விடுவேன் ” என்றார்.

முனிவர் மகிழ்ந்து
“அவ்வளவுதானே இதோ இப்பொழுதே நான் இதுவரை பெருமாளுக்கு செய்த பூஜையின் பலனையெல்லாம் அந்த ஏழைக்கு தாரைவார்த்து தருகிறேன்” என்று கூறி ஏழைக்கு தன் பூஜையின் பலனை தாரை வார்த்து கொடுத்தார் ராகு-பகவானும் முனிவரின் தர்ம குணத்தை எண்ணி மகிழ்ந்து மறைந்து போனார். கீரை கட்டில் இருந்த கரு-நாகமும் மறைந்தது..

முனிவர் ஏழையிடம் ஒரு கட்டளையிட்டார் “அப்பா இனி நீ தினமும் என் பூஜைக்கு துளசி பறித்து வரவேண்டும் சரியா?” என்றார் . ஏழைக்கு மகிழ்ச்சி நம்மால் பெருமாளுக்கு பூஜை செய்யமுடியாவிட்டாலும் முனிவர் மூலம் இப்படி ஒரு கொடுப்பினை கிடைக்கிறதே என்று -நினைத்து மகிழ்ந்து கொண்டே இல்லம் நோக்கி சென்றான் .

வைகுண்ட வாசன் நம்மிடம் எதிர்பார்ப்பதெல்லாம் ஆழ்ந்த பக்தியே..

பக்தியோடு எதை கொடுத்தாலும் பரவசமாய் அவன் ஏற்பான் அதை .

]]>
https://tamilyugam.in/%e0%ae%a4%e0%af%81%e0%ae%b3%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%88/feed/ 0