AI மூலம் மூதாட்டியிடம் ரூ.1.4 லட்சம் மோசடி..!!

ஹைதராபாத்தை சேர்ந்த 59 வயது மூதாட்டியிடம், Al மூலம் மருமகன் குரலை போல மாற்றிப் பேசி ரூ.1.4 லட்சம் மோசடி நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் இருந்து அவரது மருமகன் போன்று, நடு இரவில் மூதாட்டிக்கு போனில் அழைத்து, தான் விபத்தில் சிக்கியதாகவும், அவசரமாக பணம் தேவைப்படுவதாகவும், பணம் கொடுக்காவிட்டால் சிறைக்கு செல்ல நேரிடும் என்று மர்ம நபர் புலம்பியுள்ளார். இதனை நம்பிய மூதாட்டி 3 முறை பணம் அனுப்பி ஏமாந்துள்ளார். போலீசில் புகார் அளித்த நிலையில் விசாரணை நடந்துவருகிறது.

Read Previous

நிசார் செயற்கைகோள் அடுத்தாண்டு ஏவப்படும் என அறிவிப்பு..!!

Read Next

சபரிமலை: பக்தர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular