தற்போதைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் கிரெடிட் கார்டுகளின் பயன்பாடுகள் அதிகரித்து காணப்படுகிறது. மேலும், இந்த கார்டுகள் அத்தியாவசிய பொருட்களுக்கு அதிக சலுகைகளை வழங்கி வருவதால், மக்கள் இதை அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், பயனாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், AXIS BANK-ன் கிரெடிட் கார்டுகளுக்கு புதிய விதிமுறைகளை AXIS BANK அறிமுகம் செய்யவுள்ளது. அதை பற்றி கீழே விரிவாக காண்போம்.
AXIS BANK-ன் புதிய விதிமுறைகளின்படி, கிரெடிட் கார்டுகளின் மூன்றாம் தரப்பு கட்டண பயன்பாடுகளான CRED, PAYTM, CHEQUE மற்றும் MOBIKWIK மூலம் பள்ளி, கல்லூரிகளுக்கு செலுத்தப்படும் பரிவர்த்தனைகளில் 1% கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும், இதுபோன்ற கட்டணங்களை தவிர்க்க விரும்பினால், பள்ளி, கல்லூரிகளின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேரடியாகவோ அல்லது POS மெஷின் மூலமாகவோ கட்டணம் செலுத்தலாம்.
இதுமட்டுமின்றி, கிரெடிட் கார்டு மூலம் மேற்கொள்ளப்படும் பயன்பாடு மற்றும் காப்பீடு தொகைகள் மூலம் பெறப்படும் ரிவார்டுகளில், ப்ரீமியம் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரிவார்ட் பாயிண்டுகளின் மாத வரம்பு ரூ.80,000 மற்றும் மற்ற கார்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.40,000 எனக் குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், மளிகை சாமான்கள் வாங்கும் ரிவார்டு, எரிபொருளின் தள்ளுபடியில் புதிய வரம்பு, DREAM FOLKS SPA நிறுத்தம் முதலியவற்றை உள்ளடக்கிய புதிய விதிமுறைகள் வரும் நவம்பர் 15ம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.




