தற்போதைய காலகட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் பணத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக வங்கிகளில் சேமித்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மேலும், பல தனியார் வங்கி பங்குகள் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபத்தை வழங்கி வருகின்றன. அந்த வகையில், அதிக ஏற்றத்தை தரும் 5 வங்கிகளின் பங்குகள் வரும் நாட்களில் 46% வரை உயரும் என்று சந்தை ஆய்வாளர்கள் கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
HDFC BANK : தனியார் துறையில் மிகப்பெரிய வங்கியாக HDFC வங்கி திகழ்கிறது. கடந்த மாதத்தில் பங்கு விலையானது 6.3% அதிகரித்துள்ளதை தொடர்ந்து, கடந்த வாரத்தில் 4.5% ஆக அதிகரித்தது. மேலும், தற்போது பங்கின் விலை 1,755-ல் வர்த்தகம் செய்யப்படுகிறது. இதனால், வரும் நாட்களில் பங்கு விலை 46% வரை உயரும் என 40 ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இண்டஸ் இண்ட் வங்கி: கடந்த மாதத்தின் பங்கு விலையானது 7.2% அதிகரித்துள்ளது. மேலும், தற்போது பங்கின் விலை 1,468-ல் வர்த்தகம் செய்யப்படுகிறது. இதனால், வரும் நாட்களில் பங்கு விலை 35.8% வரை உயரும் என 42 ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக்ஸிஸ் வங்கி: கடந்த மாதத்தின் பங்கு விலையானது 6.6% அதிகரித்துள்ளது. மேலும், தற்போது பங்கின் விலை 1,242-ல் வர்த்தகம் செய்யப்படுகிறது. இதனால், வரும் நாட்களில் பங்கு விலை 24.5% வரை உயரும் என 39 ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோட்டக் மஹிந்திரா வங்கி: கடந்த மாதத்தின் பங்கு விலையானது 5.5% அதிகரித்துள்ளது. மேலும், தற்போது பங்கின் விலை 1,922-ல் வர்த்தகம் செய்யப்படுகிறது. இதனால், வரும் நாட்களில் பங்கு விலை 20.8% வரை உயரும் என 37 ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ICICI வங்கி: கடந்த மாதத்தின் பங்கு விலையானது 13.5% அதிகரித்துள்ளது. மேலும், தற்போது பங்கின் விலை 1,318-ல் வர்த்தகம் செய்யப்படுகிறது. இதனால், வரும் நாட்களில் பங்கு விலை 20.3% வரை உயரும் என 39 ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




