தற்போதைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் FIXED DEPOSIT-ல் பணத்தை அதிகம் முதலீடு செய்து வருகிறார்கள். மேலும், பொதுத்துறை வங்கிகள் மற்றும் பல்வேறு தனியார் வங்கிகளும் FD-ல் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுக்கும் வட்டியை வழங்கி வருகிறது. அந்த வகையில், பொதுத்துறை வங்கியான BANK OF INDIA, புதிய Fixed deposit திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும், இந்த திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடாக ரூ, 10,000 முதல் அதிகபட்ச முதலீடு ரூ. 3 கோடிக்கு குறைவாக இருக்க வேண்டும். மேலும், இந்த புதிய FD திட்டத்தில் 400 நாட்களுக்கு ரூ. 3 கோடிக்கு குறைவாக FD செய்பவர்களுக்கு 8.1% வட்டி வழங்கி வருகிறது. உதாரணமாக, இப்போது, திரும்ப பெற முடியாத வைப்பு நிதியாக இருந்தால், ரூ.1 கோடிக்கு மேல் முதலீடு செய்பவர்களுக்கு 7.45% வட்டி வழங்குகிறது. அதேபோல், மூத்த குடிமக்களாக இருக்கும் பட்சத்தில், 7.95% வட்டி மற்றும் சூப்பர் சீனியர் சிட்டிசனுக்கு 8.1% வட்டி வழங்க படுகிறது. அதே, திரும்ப பெறும் வைப்பு நிதியாக இருந்தால், ரூ.1 கோடிக்கு மேல் முதலீடு செய்பவர்களுக்கு 7.30% வட்டியும், சீனியர் சிட்டிசனுக்கு 7.80% வட்டியும் மற்றும் சூப்பர் சீனியர் சிட்டிசனுக்கு 7.95% வட்டியும் வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறைகள்:
இந்த புதிய FD திட்டத்தில் இந்திய குடிமக்களும் மற்றும் NRE, NRO கணக்கு வைத்திருப்பவர்களும் இணையலாம். மேலும், இது கடந்த செப்டம்பர் 27ம் தேதியன்று நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தை பற்றி மேலும் அறிந்து கொள்வதற்கு BANK OF INDIA-வின் அதிகாரப்பூர்வ BOI ஆம்னி நியோ செயலி மூலமும் மற்றும் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் பார்வையிடலாம். மேலும், இதன்மூலம் இத்திட்டத்தில் இணைந்தும் கொள்ளலாம்.




