பொதுவாகவே வீட்டை எவ்வளவு தான் சுத்தம் செய்தாலும் குளியறையில் மற்றும் சமையறையில் இருக்கும் டைல்களை கறைப்படிந்த படியே இருக்கும். இதனை சுத்தம் செய்வது மிகவும் சவாலான விடயமாகவே இருக்கின்றது.
என்னதான் குளியலறை மற்றும் சமயலறையை நாம் பளீரென மாற்ற முயற்சித்தாலும், அது நடப்பதில்லை. என புலம்புபவர்கள் தான் அதிகம். சமயலறை டயில்ஸை கூட நாம் ஓரளவுக்கு பளீரென மாற்றிவிடலாம்.
ஆனால், அதிகமாக தண்ணீர் பயன்படுத்தப்பத்தப்படுவதனால் குளியலறை டயில்ஸை பளீர் என மாற்றுவது மிகவும் கடினமான விடயம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் தண்ணீரில் உள்ள உப்பு கரை டயில்ஸில் படிந்து நாளடைவில் சுத்தம் செய்யவே முடியாத கறையாக மாறிவிடுகின்றது.
இதை என்படியாவது சுத்தம் செய்துவிடவேண்டும் என இதற்காக அதிக பணத்தை வீண்விரயம் செய்பவர்கள் அதிகம். குளியலறையை சுத்தம் செய்வதற்கென பல்வேறு சுத்தம் செய்யும் திரவங்கள் சந்தைகளில் கிடைக்கின்றது.
ஆனால், அவை நமக்கு எந்த விதமான பலனையும் கொடுப்பதில்லை. ஆனால், நமது வீட்டு சமையலறையில் இருக்கும் ஒரு சில பொருட்களை கொண்டுடே குளியலறை மற்றும் சமையலறை டைல்களை பளீச் என மாற்றலாம்.அது தொடர்பில் இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
சமையல் சோடா மற்றும் எலுமிச்சை:
குளியலறை மற்றும் சமயலறை டைல்களில் படிந்துள்ள பல வருட கறைகளை கூட எளிமையாக நீக்குவதற்கு பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை பயன்படுத்தலாம்.
கறைப்படிந்த டைல்ஸ் மீது வெந்நீரை ஊற்றி சிறிது நேரம் அப்படியே ஊற விட்டுவிட வேண்டும்.
பின்னர் அரை வாளி வெந்நீரில் அரை கப் சமையல் சோடா, அரை கப் எலுமிச்சை சாறை சேர்த்து இந்த கலவையை டைல்களில் தெளித்து 5 நிமிடங்களின் பின்னர் நன்றாக தேய்த்து கழுவினால் டைல்ஸ் பளீச் என புதிது போல் தோற்றமளிக்கும்.
வினிகர்:
சீன உணவுகள் தயாரிப்பில் முக்ககிய இடம் வகிக்கும் வினிகர் கறை படிந்த டைல்ஸை சுத்தம் செய்வதிலும் பெரிதும் துணைப்புரிகின்றது.
வினிகர் மற்றும் தண்ணீரை சம அளவு எடுத்து நன்றாக கலக்கவும். இதற்குப் பிறகு, கலவையில் ஒரு துணி அல்லது பஞ்சை நனைத்து டைல்களை நன்றாக தேய்த்து கழுவினால் குளியலறை புதிது போல் பளபளவென இருக்கும்.