BE முடித்தவர்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.1,40,000/- ..!!

Engineer, Officer பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை Indian Highways Management Company Limited (IHMCL) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 31 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

IHMCL காலிப்பணியிடங்கள்:

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Engineer, Officer பணிக்கென மொத்தம் 31 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech / CA / CMA என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

IHMCL வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IHMCL தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 16.08.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

மேலும் விவரங்களுக்கு:

https://ihmcl.co.in/wp-content/uploads/2024/07/Final-Advertisement_02.07.2024-With-annexures.pdf

Read Previous

நாளுக்கு நாள் புதிய உச்சத்தில் தங்கத்தின் விலை – இன்றைய விலை என்ன தெரியுமா?..

Read Next

அவர் யாருன்னு தெரியுமா?.. ஒரு காலத்துல எப்படி வாழ்ந்தவரு.. அவருக்கே இப்படி ஒரு நிலைமையா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular