பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Havildar(Security)பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Physical Endurance Test / Written Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
BEL காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Havildar(Security) பணிக்கென காலியாக உள்ள 4 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Havildar கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மேலும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 15 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
BEL வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 43 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Havildar ஊதிய விவரம்:
தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.79,000/- ஊதியமாக வழங்கப்படும்.
BEL தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் Physical Endurance Test / Written Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு 03.09.2024ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
https://bel-india.in/wp-content/uploads/2024/08/ADV-Security_Vellore_Bilingual-Facility-.pdf
மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை தினந்தோறும் நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் நமது தமிழ் யுகம் இணைய நாளிதழை (Follow) பின்தொடருங்கள்.