
BEL நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Medical Officer பணிக்கென காலியாக உள்ள ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
BEL காலிப்பணியிடங்கள்:
BEL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Medical Officer பணிக்கென 1 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
Medical Officer கல்வி தகுதி:
அரசு அல்லது அரசு அனுமதி பெற்று இயங்கும் பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு தகுதியானவர்கள்.
BEL வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 33 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Medical Officer ஊதிய விவரம்:
தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
BEL தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 27.08.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
https://bel-india.in/wp-content/uploads/2024/08/Final-Advertisement-Medical-0108.pdf
மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை தினந்தோறும் நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் நமது தமிழ் யுகம் இணைய நாளிதழை (Follow) பின்தொடருங்கள்.