
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் உட்பட பல நடிகர்கள் உலகில் உருவாகியுள்ள திரைப்படம் தான் “லியோ”. இந்த திரைப்படம் விரைவில் திரையில் வெளியாகியுள்ள நிலையில் படத்தின்” நான் ரெடி” பாடல் சமீபத்தில் வெளியாகி உள்ளது.
இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் போதை பொருள் உபயோகத்தை தூண்டுவது போல அமைந்து உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். பாடல் வெளியான சமயத்திலேயே அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் தலைவர் ராஜேஸ்வரி பிரியா “லியோ” பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து புகார் தெரிவித்து உள்ளார் .
மேலும் இந்த நிலையில் அவரை விஜய் ரசிகர்கள் கடுமையாக வறுத்தெடுத்து வரும் நிலையில் ராஜேஸ்வரி பிரியாவின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் உலா விட்டு வருகின்றனர். இதனால் பதறிப்போன ராஜேஸ்வரி பிரியா டி.ஜி.பி சங்கர் ஜிவாலிடம் புகார் அளித்து உள்ளார்.