
நேற்று தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றார்கள்.
அந்த வகையில் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ .பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்த வந்து உள்ளனர். அப்பொழுது எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கும் ஓ பன்னீர்செல்வம் தரப்பிற்கும் இடையில் மோதல் ஏற்பட்டு உள்ளது.
பெரியார் சிலைக்கு கீழ் பெரியாரின் படத்தைக் கொண்டு வந்து வைத்த ஓ பன்னீர் செல்வம் தரப்பினார் மரியாதை செலுத்தினார். அதன் பின் வந்த எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரும் அந்த படத்திற்கு நாங்கள் மரியாதை செலுத்த மாட்டோம் என்று வாக்குவாதம் செய்ததால் இரு தரப்பிற்கும் இடையில் சண்டை ஏற்பட்டது. எனவே இரு தரப்பினரும் மோதி கொண்டதாக தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது.